க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா....! டி20 போட்டி தள்ளிவைப்பு....!
- IndiaGlitz, [Tuesday,July 27 2021]
பிரபல கிரிக்கெட் வீரரான க்ருணால் பாண்ட்யாவுக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவிருந்த இந்தியா மற்றும் இலங்கை இடையேயான, 2-ஆவது டி20 போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றப்பயணம் மேற்கொண்டும், விளையாடி வருகிறது. அந்தவகையில் ஒருநாள் தொடரில், முதலாவது போட்டியில் 2-1 என்ற கணக்கில், இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் போட்டிக்காக வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். போட்டி துவங்குவதற்கு முன்பு இரு நாட்டைச்சார்ந்த வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் க்ருணால் பாண்ட்யாவுக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரின் சகோதரரான ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் உள்ளிட்ட 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் ஒன்று நடைபெறவிருந்த 2-ஆவது டி20 போட்டி தள்ளி வைக்கப்பட்டு, நாளை நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்குமுன் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இதனால் டி-20 தொடர் திட்டமிட்ட தேதியில் துவங்கமால், தாமதமாக துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.