க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா....! டி20 போட்டி தள்ளிவைப்பு....!

  • IndiaGlitz, [Tuesday,July 27 2021]

பிரபல கிரிக்கெட் வீரரான க்ருணால் பாண்ட்யாவுக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெறவிருந்த இந்தியா மற்றும் இலங்கை இடையேயான, 2-ஆவது டி20 போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றப்பயணம் மேற்கொண்டும், விளையாடி வருகிறது. அந்தவகையில் ஒருநாள் தொடரில், முதலாவது போட்டியில் 2-1 என்ற கணக்கில், இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் போட்டிக்காக வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். போட்டி துவங்குவதற்கு முன்பு இரு நாட்டைச்சார்ந்த வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் க்ருணால் பாண்ட்யாவுக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரின் சகோதரரான ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் உள்ளிட்ட 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் ஒன்று நடைபெறவிருந்த 2-ஆவது டி20 போட்டி தள்ளி வைக்கப்பட்டு, நாளை நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்குமுன் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இதனால் டி-20 தொடர் திட்டமிட்ட தேதியில் துவங்கமால், தாமதமாக துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை?

தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் பலர் தமிழிலும் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்

நதியாவின் ஃபிட்னெஸ்-க்கு இதுதான் காரணமா? வைரல் வீடியோ

கடந்த 1985ஆம் ஆண்டு 'பூவே பூச்சூடவா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நதியா. அதன்பிறகு நடிகை நதியா, ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், சிவகுமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்

குரலில் இசையை கொண்ட "குரல் இனியாள்".....! பாடகி சித்ரா பர்த்டே ஸ்பெஷல்....!

தன்னுடைய குரல் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்பால் ஈர்த்த சின்னக்குயில் சித்ரா அவர்களின், 58-ஆவது பிறந்தநாள் இன்று ஜூலை 27.

நடிகர் பசுபதியா இவர்? ஆச்சரியப்பட வைக்கும் இளவயது புகைப்படம்!

சமீபத்தில் வெளியான பா ரஞ்சித்தின் 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்கு திரையுலகினர், ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர்

சினிமா பாணியில் ஆக்ஸன் காட்சி....! தலைமை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்.....!

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிர பரிசோதனை நடத்தி வருகிறார்கள்...