இலங்கை சிறையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

  • IndiaGlitz, [Friday,August 11 2017]

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து தற்போது விளையாடி வருவது தெரிந்ததே. இதுவரை விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, நாளை 3வது போட்டியில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இலங்கையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளங்களை ஓய்வு நேரத்தில் சுற்றி பார்த்து வருகின்றனர். அவற்றில் ஒன்று சீதையை ராவணன் சிறை வைத்த அசோகவனம். தற்போது நுவரேலியா என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் சீதைக்கு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சென்று பார்த்தனர்.

இந்த கோவிலை சுற்றியுள்ள பாறைகளில் காணப்படும் கால்தடங்கள் ராவணன் வளர்த்த கால்தடம் என்று கூறப்படுகிறது. சீதையை சிறை வைத்த இடத்தை பார்த்தது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More News

ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்: தற்கொலை முயற்சிக்கு விசாரணையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ஓவியா, பிக்பாஸ் வீட்டில் இருந்த போது திடீரென ஆரவ் உடனான காதல் தோல்வி காரணமாக மனத்தடுமாற்றத்துடன் காணப்பட்டார். ஒருகட்டத்தில் நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது...

பிக்பாஸ்: ஓவியா இடத்தை நிரப்புவாரா சீரியல் நடிகை?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை நெருங்கிவிட்டது...

கமல்ஹாசனின் டுவிட்டுகளுக்கு அர்த்தம் என்ன?

கடந்த சில மாதங்களாகவே உலக நாயகன் கமல்ஹாசன் ஆக்கபூர்வமான கருத்துக்களை தனது டுவிட்டரில் பதிவு செய்து ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முரசொலி பவளவிழாவில் கலந்து கொண்ட பின்னர் தனது டுவிட்டரில் இரண்டு பதிவுகளை தெரிவித்துள்ளார்...

தற்காப்பு முக்கியம் அல்ல; தன்மானம்தான் முக்கியம்: முரசொலி பவளவிழாவில் கமல்

நேற்று நடைபெற்ற முரசொலி பவள விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்...

நீண்ட இடைவெளிக்கு பின் முரசொலிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்

'முரசொலி' என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது கலைஞர் கருணாநிதி தனது தொண்டர்களுக்கு எழுதும் 'உடன்பிறப்பே' என்று ஆரம்பிக்கும் மடல் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்...