யோகிபாபு மகன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

சமீபத்தில் நிகழ்ந்த பிரபல நடிகர் யோகி பாபு மகனின் பிறந்தநாளில் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது யோகிபாபு மகன் பிறந்த நாளில் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகிபாபு தற்போது ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் யோகிபாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவருடைய குலதெய்வம் கோவிலில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதியின் குழந்தைக்கு விசாகன் என்று பெயர் வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் யோகி பாபு தனது மகனின் முதலாவது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவிற்கு பல திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களாகிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் விஜய்சங்கர் ஆகிய இருவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு யோகிபாபுவின் குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஏற்கனவே நடராஜன் மற்றும் யோகிபாபு ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், ஒரு சில முறை இருவரும் நேரில் சந்தித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

ஒமிக்ரான் ஒன்னும் செய்யாது, மனசுல தெம்ப வளர்த்துகோங்க: பிரபல நடிகர் டுவிட்!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி மனித குலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒமிக்ரான் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், அது ஒன்றும் செய்யாது

நீ வெளியே பாக்கத்தான் மனுஷன், உள்ளுக்குள்ள நாய்: 'நாய்சேகர்' டீசர்

பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் 'நாய் சேகர்' படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகப்புகழ் பெற்ற பாடலுக்கு ஆட்டம் போடும் ஸ்ருதிஹாசன் - அக்சராஹாசன்: வைரல் வீடியோ

 உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் திரையுலக பிரபலங்களும் புத்தாண்டு கொண்டாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

சகோதரிகள், சகோதரருடன் புத்தாண்டு கொண்டாடும் செல்வராகவன்: வைரல் புகைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் தனது சகோதரிகள் மற்றும் சகோதரருடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

2022ஆம் ஆண்டை உச்சகட்ட கிளாமருடன் வரவேற்ற இலியானா: வைரல் புகைப்படம்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான இலியானா கிளாமர் உடையுடன் 2022ஆம் ஆண்டை வரவேற்ற புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள