காதலியை கரம்பிடித்த 22 வயது இளம் இந்திய வீரர்… ரசிகர்கள் வாழ்த்து!

இந்தியக் கிரிக்கெட் அணியில் லெக் ஸ்பின் பந்துவீச்சாளராக இருந்துவரும் ராகுல் சாஹர் தனது நீண்டநாள் காதலி இஷானியை கரம்பிடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருந்துவரும் தீபக் சாஹரின் ஒன்றுவிட்ட சகோதரரான ராகுல் சாஹர் சுழற்பந்து வீச்சில் கலக்கி வருகிறார். 22 வயதே ஆன இவர் இதுவரை இந்திய அணிக்காக 6 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். மேலும் ஒரு ஒருநாள் போட்டியிலும் விளையாடி இருக்கிறார். தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் கைக்கோர்த்துள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் சாஹருக்கும் அவரது காதலி இஷானிக்கும் கோவாவில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் ராகுல் சாஹர்- இஷானி ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு வருகிறன்றனர்.

கோவாவில் திருமணம் முடிந்த நிலையில் வரும் சனிக்கிழமையன்று இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.