ஒழுக்கமில்லாமல் இருந்தது தான் இந்திய அணியின் மோசமான தோல்விக்குக் காரணம்..! முன்னாள் பேட்ஸ்மேன்.

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லக்ஷ்மன், விராட் கோலியின் அணியினர் நீண்ட காலமாக அனைத்து பிரிவுகளிலும் ஒழுக்கமாக இல்லை, அதனால் தான் நியூசிலந்து அணியிடம் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர் என்று கூறியுள்ளார். கிறிஸ்ட்சர்ச், ஹாக்லே ஓவலில் நடந்த இரண்டாவது போட்டியின் போது, டாம் லாதம் மற்றும் டாம் ப்ளண்டெல் ஆகியோர் அரைசதம் அடிப்பதற்கு முன்பாக, டிரெண்ட் போல்ட் மற்றும் டிம் சவுதி ஆகியோர் இந்திய பவுலர்களை எளிதாக வீழ்த்தினர். இதன் விளைவாக நியூசிலாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து இந்தியாவை வென்றது.

“இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றதற்கு பிளாக் கேப்ஸுக்கு வாழ்த்துக்கள். அதை பெற தேவையான ஒழுக்கத்தை இந்தியா பெற்றிருக்கவில்லை, அது மிகவும் ஏமாற்றமடைவதாக உள்ளது” என்று லக்ஷ்மன் ட்விட் செய்துள்ளார். விராட் கோலியின் மோசமாக பேட்டிங் தான் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியடைய காரணம் என்று லக்ஷ்மன் கூறியுள்ளார்.

நான்கு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அதிகபட்சமாக 19 ரன்கள் எடுத்த கோலி, மொத்தமாக 38 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் கேப்டனாக தனது முதல் டெஸ்ட் தொடரின் தோல்வியாகும். வரையறுக்கப்பட்ட ஓவர்களில், எட்டு இன்னிங்ஸில் ஒரு அரைசதத்தை மட்டுமே நிர்வகிக்க முடிந்ததால் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார். மொத்தத்தில், 31 வயதான கோலி, இந்த சுற்றுப்பயணத்தில் 11 இன்னிங்ஸ்களில் இருந்து 218 ரன்கள் எடுத்தார், 51 அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.

 ஒரு நாள் தொடர் முதல் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் வரை இந்த சுற்றுப்பயணத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், இரண்டு மிக முக்கியமான வீரர்களின் ஃபார்ம்- பேட்டிங் துறையில் விராட் கோலி மற்றும் பந்துவீச்சு துறையில் ஜஸ்பிரீத் பும்ரா, என்றார் லக்ஷ்மன்.

விராட் கோலியின் ஃபார்ம், நிச்சயமாக இந்திய அணிக்கு மிகப்பெரிய மந்தமான நிலையில் இருந்தது. ஏனெனில் உங்கள் சிறந்த பேட்ஸ்மேன், உலகின் மிகச் சிறந்தவர், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 9 (9.50 துல்லியமாக) இருந்தால், சுற்றுப்பயணம் செல்லும் அணிக்கு அது மிகவும் கடினமான போட்டியாக இருக்கும்,” என்று மேலும் கூறினார். நியூசிலாந்து அணியுடனான ஒயிட்வாஷுக்கு பிறகும் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இன்னொரு பக்கம், நியூசிலாந்து அணி 180 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.
 

More News

மாஸ்டர் நாயகி கிடைத்த பாலிவுட் வாய்ப்பு: பரபரப்பு தகவல் 

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி அறிவித்த சூர்ப்பநகை டைட்டில்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் இன்று தனது சமூக வலைத்தளத்தில் ரெஜினா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவிக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ரெட்மி நோட் 9 சீரிஸ் இந்தியாவில் எப்போ வரப்போகிறது தெரியுமா..?

ஷாவ்மியின் ரெட்மி நோட் சீரிஸ் அதன் மலிவான விலைக்காக பிரபலமாக இருப்பதால், ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ இரண்டும் ரூ.20,000 விலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போயிடுவேன்னு நினச்சீங்களா.. அது, மகளிர் தினத்துக்கான சிறப்பு பதிவு..! நரேந்திர மோடி.

மோடி, சமூக வலைதளத்தில் இருந்து விலகப்போவதாக சொன்னதற்கான சஸ்பென்ஸை உடைத்துள்ளார்.    

புத்திசாலித்தனத்தால் திருடனை விரட்டி அடித்த இளம் பெண்..! வீடியோ.

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது புத்தி சாதுரியத்தால் திருடனை விரட்டியடித்த சம்பவத்தின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.