இந்திய அரசியலமைப்பு சட்டம் ரஜினிக்கு தெரியாது: பிரபல அரசியல்வாதி

  • IndiaGlitz, [Tuesday,May 23 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். நேற்று சென்னையில் ஒரு அமைப்பின் சார்பில் ரஜினி உருவ பொம்மையும் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்றும் அவர் படிப்பறிவு இல்லாதவர் என்றும் கருத்து கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தற்போது மீண்டும் ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலுக்கு ரஜினிகாந்த் ஏற்றவர் அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டம், அடிப்படை உரிமைகள் முதலியவற்றைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவர் சினிமாவில் நடிப்பதே சிறந்தது. நல்ல வசனங்களை பேசி மக்களை சந்தோஷப்படுத்தலாம்.

அரசியலில் நுழையும் நட்சத்திரங்கள் தமிழகத்திற்கு காமராஜ் செய்ததை பாழாக்கி இருக்கிறார்கள். அப்போது போடப்பட்ட அடிப்படை கட்டமைப்பையும் அழித்துவிட்டார்கள். சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More News

ஆக்சன் கிங் அர்ஜூனின் 'நிபுணன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்த 150வது திரைப்படமான 'நிபுணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

விக்ரம்பிரபுவின் 'சத்ரியன்' - திரை முன்னோட்டம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் இளையதிலகம் பிரபுவின் மகனுமான விக்ரம்பிரபு, 'கும்கி' படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் 'இவன் வேற மாதிரி', 'அரிமா நம்பி', சிகரம் தொடு' உள்பட ஒருசில வெற்றி படங்களில் நடித்து கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்

ரஜினிக்கு அரசியலே தெரியவில்லை! நாஞ்சில் சம்பத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்களின் சந்திப்பின்போது பரபரப்பான ஒருசில அரசியல் கருத்துக்களை தெரிவித்தார். அவற்றில் ஒன்று தமிழகத்தில் சிஸ்டமே சரியில்லை.

தனுஷ் பட நடிகையின் பதவியை பறிக்க மத்திய அரசு முடிவு

தனுஷ் நடிப்பில் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினி இயக்கிய 'விஐபி 2' திரைப்படம் வரும் ரம்ஜான் திருநாளில் வெளியாக உள்ளது.

சமந்தா-நாகசைதன்யா திருமண தேதி அறிவிப்பு?

பிரபல நடிகை சமந்தாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.