பாராலிம்பிக் போட்டியில் இன்று பதக்க வேட்டை நடத்திய இந்திய வீரர்கள்!

மாற்றுத் திறனாளிகளுக்கான 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் 162 நாடுகளைச் சேர்ந்த 4,430 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

1.ஈட்டி எறிதல் போட்டியில் எஃபி64 பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் சுமித் அன்டில். இவர் 68.55 மீ தூரம் வீசி பாராலிம்பிக் போட்டியில் புது உலகச் சாதனையை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

2.ஈட்டி எறிதலில் கிளாஸ் F45 பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா.

3.துப்பாக்கிச் சூடும் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகாரா. 19 வயதான இவர் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல்பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்-2 மகளிர் 10மீட்டர் துப்பாக்கிச் சுடும ஏர்ரைபிள் ஸ்டேண்டிங் பிரிவில் 249.6 புள்ளிகளுடன் தங்கம் வென்றது உலகச்சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

4.ஈட்டி எறிதலில் கிளாஸ் F45 பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற சுந்தர் சிங். இரண்டு முறை தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா தற்போது 3ஆவது பதக்கத்தை வென்றுள்ளார்.

5.வட்டு எறிதல் F56 பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற யோகேஷ் கதூனியா.24 வயதான யோகேஷ் எஃப் 56 பிரிவில் டிஸ்கஸ் வீசுபவர். டெல்லியைச் சேர்ந்த கிரோரிமல் கல்லூரியில் பி.காம் பட்டதாரி. இவர் தனது 6 ஆவது மற்றும் கடைசி முயற்சியில் 44.38 மீ ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

6.சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F46 இறுதிப்போட்டியில் ஜஜாரியாவை பின்னுக்குத் தள்ளி இவர் வெண்கலப்பதக்கம் வென்றார்.