இமயமலையில் பனிமனிதனா? காலடி தடத்தை பதிவு செய்த இந்திய ராணுவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பனிமனிதன் குறித்து பல புராணக்கதைகளில், திரைப்படங்களில், வீடியோ கேம்ஸ்களில் நாம் பார்த்திருக்கின்றோம், கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் உண்மையில் பனிப்பிரதேசங்களில் பனிமனிதன் நடமாடி வருவதாக கூறப்படும் செய்திகளுக்கு இதுவரை எந்தவித ஆதாரங்களும் இல்லை. விஞ்ஞானிகளும் பனிமனிதனை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை
இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி நேபாள நாட்டில் உள்ள இமயமலை பகுதியில் ஒரு ஆச்சரியத்தக்க வகையிலான காலடி தடத்தை இந்திய ராணுவத்தினர் பார்த்துள்ளனர். இதுகுறித்த புகைப்படமும் இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது,
32.5 இன்ச் அளவுள்ள இந்த பிரமாண்ட காலடித்தடம் பனிமனிதனின் காலடித்தடமாக இருக்குமோ என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது. புராணங்களில் காணப்படும் பிரமாண்டமான மிருகத்தின் காலடித்தடம் போன்று இந்த காலடித்தடங்கள் இருப்பதாக இந்திய ராணுவம் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்தால் இன்னும் பல உண்மைகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
For the first time, an #IndianArmy Moutaineering Expedition Team has sited Mysterious Footprints of mythical beast 'Yeti' measuring 32x15 inches close to Makalu Base Camp on 09 April 2019. This elusive snowman has only been sighted at Makalu-Barun National Park in the past. pic.twitter.com/AMD4MYIgV7
— ADG PI - INDIAN ARMY (@adgpi) April 29, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments