இமயமலையில் பனிமனிதனா? காலடி தடத்தை பதிவு செய்த இந்திய ராணுவம்!

  • IndiaGlitz, [Tuesday,April 30 2019]

பனிமனிதன் குறித்து பல புராணக்கதைகளில், திரைப்படங்களில், வீடியோ கேம்ஸ்களில் நாம் பார்த்திருக்கின்றோம், கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் உண்மையில் பனிப்பிரதேசங்களில் பனிமனிதன் நடமாடி வருவதாக கூறப்படும் செய்திகளுக்கு இதுவரை எந்தவித ஆதாரங்களும் இல்லை. விஞ்ஞானிகளும் பனிமனிதனை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை

இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி நேபாள நாட்டில் உள்ள இமயமலை பகுதியில் ஒரு ஆச்சரியத்தக்க வகையிலான காலடி தடத்தை இந்திய ராணுவத்தினர் பார்த்துள்ளனர். இதுகுறித்த புகைப்படமும் இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது,

32.5 இன்ச் அளவுள்ள இந்த பிரமாண்ட காலடித்தடம் பனிமனிதனின் காலடித்தடமாக இருக்குமோ என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது. புராணங்களில் காணப்படும் பிரமாண்டமான மிருகத்தின் காலடித்தடம் போன்று இந்த காலடித்தடங்கள் இருப்பதாக இந்திய ராணுவம் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்தால் இன்னும் பல உண்மைகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

தாலி கட்டிய அடுத்த நிமிடம் பப்ஜி விளையாடிய மணமகன்: மணமகள் அதிர்ச்சி

பப்ஜி என்று சொல்லப்படும் ஆன்லைன் விளையாட்டிற்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல இளைஞர்கள் அடிமையாகியுள்ள நிலையில் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும்

ரஜினியின் 'தர்பாரில் இணைந்த 'காலா' பட நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

அடுத்த படத்தையும் என்னை வைத்து எடுங்கள்: பிரபல இயக்குனரிடம் சூர்யா வேண்டுகோள்

சூர்யா, சாய்பல்லவி நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசியபோது,

இராவண கோட்டத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்

'மதயானைக்கூட்டம்' பட இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கும் அடுத்த படமான 'இராவண கோட்டம்' என்ற படத்தின் நாயகனாக கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளார்

தங்கமங்கை கோமதிக்கு விஜய்சேதுபதி செய்த உதவி!

ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உதவிகளும் குவிந்து வருவது தெரிந்ததே.