அஜித் பாடலுக்காக கேக் வெட்டி கொண்டாடிய ராணுவ வீரர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'அடிச்சு தூக்கு' பாடல் நேற்றிரவு 7 மணிக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த பாடல் குறித்த ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் பலமணி நேரம் இந்திய அளவிலும், உலக அளவிலும், டிரெண்டிங்கில் இருந்ததே இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பை அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த நிலையில் இந்த பாடலை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும், குறிப்பாக தேசத்தை பாதுகாக்கும் ராணுவ வீரர்களையும் இந்த பாடல் கவர்ந்துள்ளது என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.
'அடிச்சு தூக்கு' பாடலை மொபைலில் பார்த்து ரசித்த ராணுவ வீரர்கள் இந்த பாடலை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு மாஸ் வரவேற்பு வேறு எந்த நடிகர்களின் பாடலுக்காவது கிடைக்குமா? என்பது சந்தேகமே.
This is how Our #IndianArmy #kolar #Karnataka Team celebrated #viswasam1stsingle #AdchiThooku in Kashmir #Thala craze Never Ends ????@LahariMusic @saisiddharth_ @SathyaJyothi_ @directorsiva @KGFAjithFans#karnatakaAjithFans ?????? pic.twitter.com/3LTjX0uMF9
— Karnataka Ajith Fans Club (@karnataka_afc) December 10, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com