அர்ச்சனா ஆர்மி கேள்விப்பட்டிருப்போம்.. இந்தியன் ஆர்மியில் உள்ளவரே பாராட்டிய வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அவர்களுடைய ரசிகர்கள் ஆர்மி ஆரம்பிப்பது, தங்களுக்கு விருப்பத்திற்குரிய போட்டியாளர்கள் பெயரில் ஆரம்பிக்கும் ஆர்மியில் அவருடைய புகழை பரப்புவது ஆகியவை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். முதல் சீசனில் ஓவியாவுக்கு ஆரம்பித்த இந்த ஆர்மி, அதன் பிறகு அனைத்து சீசனிலும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் அர்ச்சனாவுக்கும் இந்த சீசனில் பலர் ஆர்மி ஆரம்பித்த நிலையில் உண்மையிலேயே இந்தியன் ஆர்மியில் உள்ள ஒருவர் அர்ச்சனாவை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
பிக் பாஸ் சீசன் 7 நன்றாக சென்று கொண்டிருக்கிறது, அனைத்து போட்டியாளர்களும் நன்றாக விளையாடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். அந்த அளவில் எனக்கு பிடித்தவர் அர்ச்சனா.
அர்ச்சனா ஏன் பிடித்தது என்றால் ஒரு ஆளை தனிப்பட்ட முறையில் டார்கெட் செய்த போது கூட அவர் அசராமல் திரும்பவும் ரீபிளேஸ் செய்தார். அந்த குணம் எனக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு எந்த ஒரு கேள்வியாக இருந்தாலும் யாரிடமும் பயப்படாமல் அந்த விஷயத்தை அவர் துணிவுடன் கேள்வி கேட்ட குணம் எனக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு எந்த ஒரு டான்ஸ் ஆக இருந்தாலும், டாஸ்க்காக இருந்தாலும் வலுக்கட்டாயமாக நான் இணைந்து கொள்கிறேன் என்று கை தூக்கினார் அந்த குவாலிட்டி எனக்கு பிடித்திருந்தது. கடைசியாக அர்ச்சனா என்டர்டெயின்மென்ட் செய்வது எனக்கு பிடித்திருந்தது.
நான் பிக் பாஸ் இதுவரை பார்க்காமல் தான் இருந்தேன், ஆனால் அர்ச்சனாவின் கேரக்டர் எனக்கு பிடித்து இருந்தது. இதேபோல் நிறைய விஷயங்கள் அவரை நான் ரசித்ததால் அவர் மீது ஒரு மரியாதை, ஒரு பாசம் வந்தது. நான் அவருக்கு தான் ஓட்டு போட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#Archana army from Indian Army 🔥🔥🔥🔥
— BB Mama (@SriniMama1) January 8, 2024
Real support from boarder 🔥🔥💥
Why he liked it
-Volunteer to game
-Diamantled groupism
- Raised valid questions
- Dance & song for entertainment#BB7QueenArchana#BiggBossTamil7#BiggBoss7Tamil#VJArchana pic.twitter.com/tsnl3ehhh9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com