பக்கா பிளான்: எம்ப்ரேயர் விமானத்தால் சாத்தியமான சக்சஸ் தாக்குதல்
- IndiaGlitz, [Tuesday,February 26 2019]
இன்று அதிகாலை இந்திய விமானப்படையின் 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து வெற்றிகரமாக தீவிரவாதிகளின் முகாம்களை அழித்து எந்தவித உயிர்ச்சேதமும் இன்றி திரும்பி வந்தன.
இந்த தாக்குதலுக்கு முன்னரே இந்திய ராணுவ அதிகாரிகள் பக்கா பிளான் செய்துள்ளனர். மிராஜ் 2000 ரக விமானங்கள் தாக்குதலுக்கு சென்றபோதே, எம்ப்ரேயர் ரக விமானங்கள் எல்லையில் வட்டமிட்டன. இந்த எம்ப்ரேயர் விமானம் ஒரே நேரத்தில் இரண்டு பணிகளை செய்யும் வல்லமை கொண்டது. அதாவது தாக்குதல் நடத்தும் விமானங்களுக்கு துல்லியமாக வழிகாட்டுவது மற்றும் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தினால் அதனை தடுப்பது. இந்த இரண்டு பணிகளையும் இந்த விமானம் ஒரே நேரத்தில் பக்காவாக செய்ததால் பாகிஸ்தானால் உடனடியாக திருப்பி தாக்க முடியவில்லை
அதுமட்டுமின்றி தாக்குதலுக்கு சென்ற விமானங்களுக்கு திடீரென எரிபொருள் சிக்கல் ஏற்பட்டால் நடுவானில் பறந்தபடியே எரிபொருளை நிரப்பும் திரன் கொண்ட ஐஎல் 78 ரக விமானங்களும் பயன்படுத்தப்பட்டன. இந்திய ராணுவத்தின் இந்த பக்கா பிளான் காரணமாகவே இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடந்தததாக செய்திகள் வெளிவந்துள்ளது.