1967 இல் சீனப்பகுதிக்கே சென்று தாக்கிய இந்திய இராணுவம்- 300  சீனர்கள் உயிரிழப்பு & பரபரப்பு சம்பவங்கள்!!!

  • IndiaGlitz, [Thursday,June 18 2020]

 

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட வில்லை என்ற தகவல் சில தினங்களாக திரும்பத் திரும்ப கூறப்படுவதைப் பார்க்க முடிகிறது. அப்படியென்றால் கடைசியாக 1962 இல் சீனாவிற்கு எதிரான எல்லைப் போரில் இந்தியா தோற்றப் பிறகு தொடர்ந்து இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருவதாகவும் சில தவறாகப் புரிந்து கொண்டு விடுகின்றனர். உண்மையில் 1967 இல் ஒரு கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்று இருக்கிறது. அதில் 300 க்கும் மேற்பட்ட சீனர்கள் உயிரிழந்தனர். அதற்கு பிறகே இருநாடுகளும் மிக உறுதியாக எல்லைக் கோட்டுப் பகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தகவலை வி.பி. சிங் அவர்கள் தனது நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

1967 வாக்கில் சிக்கிம் பகுதியையொட்டி சீன-திபெத் எல்லைப் பகுதியில் இருக்கும் நாகலா கணவாய் அருகே இரண்டு நாட்கள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று இருக்கிறது. இதற்கு ஒரு மிகப்பெரிய காரணமாக பாகிஸ்தான் விளங்கியது என்பதையும் வி.பி. சிங் சுட்டிக் காட்டியிருக்கிறார். 1962 இல் சீனாவிடம் இந்தியா தோற்றப்பிறகு இருநாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இருநாடுகளும் அவர்களது வெளியுறவு துறை அமைச்சர்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதனால் சிறு குழுக்கள் மட்டுமே மற்ற நாடுகளில் பணியாற்றும் நிலைமை ஏற்பட்டது. அப்படி பெய்ஜிங்கில் வேலைபார்த்த இந்திய தூதர அலுவலகத்தில் சீன தனது காவலர்களை அனுப்பி வெளியே வராதபடி கட்டுப்பாடுகளை காட்டியது. காரணம் இந்திய அதிகாரிகள் சீனாவில் உளவு வேலைப் பார்ப்பதாக குற்றம் சாட்டியது. சீனா செய்ததைப் போலவே இந்தியாவும் டெல்லியில் அமைந்திருந்த சீனத் தூதரகத்தில் கண்டிப்புக் காட்டியது. அந்நேரத்தில் சீனா கூறிய மற்றோர் குற்றச்சாட்டும் மிகப் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது இந்திய இராணுவ வீரர்கள் சீனாவிற்குச் சொந்தமான 800 ஆடுகளைத் திருடி விட்டதாகவும் குற்றம் சாட்டத் தொடங்கியது.

இப்படியொரு சம்பவம் நடப்பதற்கு முக்கிய காரணமாக பாகிஸ்தான் இருந்ததகாவும் வி.பி. குறிப்பிடுகிறார். 1962 இல் இந்தியா சீனாவிடம் தோற்றபிறகு பாகிஸ்தான் பிரதமர் அயூப் கான் ரகசியமாக சீனாவிற்கு சென்று தனக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தாகவும் பாகிஸ்தானுக்கு உதவும் நோக்கில் அன்று முதல் இந்தியா மீது சீனா அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலை மேஜர் ஜெனரலாக பதவி வகித்த வி.பி. சிங் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சிக்கிம் பகுதியில் இவர் பணியாற்றியபோது அப்பகுதியின் இராணுவ கமாண்டராக சாகத்சிங் பதவி வகித்து இருக்கிறார். பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் எல்லையில் அமைக்கப் பட்டு இருந்த எல்லைக் கண்காணிப்பு மையத்தை அகற்றுமாறு சீனா இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது. அதற்கு இராணுவ கமாண்டராக இருந்த சாகித் சிங் மறுப்புத் தெரிவித்து இருக்கிறார்.

இதனால் சீனா பல நேரங்களில் எல்லைப் பகுதிகளைத் தாண்டி தாக்குதலில் ஈடுபடவும் செய்திருக்கிறது. இந்த பிரச்சனையை தவிர்க்க இந்தியா எல்லைப் பகுதியில் இரும்பு வேலிகளை அமைத்து விடலாம் என்ற முடிவிற்கு வந்தது. அதனால் 1967 செப்டம்பர் 11 ஆம் தேதி சிக்கிம் பகுதியில் இரும்பு வேலி போடும் பணிகள் கடுமையான பாதுகாப்புடன் தொடங்கப்பட்டன. இதற்கு சீனா கடும் எதிர்ப்புகளை காட்டியது. மேலும் எல்லைப் பகுதியைக் கடந்து சீனா துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டது. முதலில் இந்திய இராணுவ வீரர்கள் துப்பாக்கியை பயன்படுத்த வில்லை என்றே கூறப்படுகிறது. காரணம் அன்றைக்கு இராணுவத் தளபதியாக இருந்தாலும் பிரதமரின் அனுமதியைப் பெறாமல் துப்பாக்கியை பயன்படுத்த முடியாது. ஆனால் இராணுவக் கமாண்டராக இருந்த சாகத் சிங் சீன வீரர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தார் என்றும் பின்புதான் இந்திய இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர் என்றும் கூறப்படுகிறது.

இப்படி ஆரம்பித்த துப்பாக்கிச் சூடு தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்றது என்றும் அதில் சீன இராணுவ வீரர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது. காரணம் இந்தியா இராணுவ வீரர்கள் இமயமலை பகுதியின் உச்சியில் நின்று கொண்டு இருந்தனர். ஆனால் சின இராணுவ வீரர்கள் திபெத் எல்லைப் பகுதியில் கீழே இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மலையின் கீழே இருந்து கொண்டு மேலே இருந்த இந்தியர்களை நோக்கி சுட முடியாமல் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2 நாட்களில் இந்தியா சார்பில் 88 வீரர்களும் சீனா சார்பில் 300 க்கும் மேற்பட்ட வீரர்களும் உயிரிழந்து இருக்கின்றனர். இச்சம்பவத்தால் இராணுவ கமாண்டர் சாகத்சிங் பணிமாற்றம் செய்யப் பட்டு இருக்கிறார்.

1962 க்குப் பிறகு சீன வீரர்களை நெருங்கவே முடியாது என நினைத்துக் கொண்டிருந்த இந்திய இராணுவ வீரர்கள் இச்சம்பவத்தால் நல்ல உற்சாகத்தை பெற்று இருந்ததாகவும் அன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நடைபெற்ற பின்பு இருநாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு கொண்டனர். அதற்கு பின்பு எந்த துப்பாக்கிச் சூடும் நடத்தப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இச்சம்பவத்திற்கு சீனா, “இந்தியா சீனாவின் எல்லைக்கு வந்து தாக்குதல் நடத்தியது” எனக் குற்றம் சாட்டியது. உண்மையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இந்திய இராணுவ வீரர்கள் சீனாவின் எல்லைப் பகுதிக்கு சென்றுதான் தாக்கினர் என்று வி.பி. சிங் சுட்டிக் காட்டுகிறார். பல இந்தியர்களின் உடல்கள் சீனப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டனர். கல்வான் தாக்குதல் நடைபெற்று இருக்கும் இந்தச் சமயத்தில் 1967 இல் நடந்த சம்பவத்தைத் தற்போது பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'பேட்ட 2' உருவாகிறதா? கார்த்திக் சுப்புராஜ் அதிரடி பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'பேட்ட' திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

7 மொழிகளில் உருவாகும் 3D படத்தில் ஹீரோவாக நடிக்கும் தனுஷ் பட வில்லன்

தமிழ் உள்பட 7 மொழிகளில் உருவாகும் 3D த்ரில் படத்தில் தனுஷ் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

ஆபாச கமெண்ட் பதிவு செய்த ரசிகரை நேரில் சந்தித்து தமிழ் நடிகை கேட்ட அதிரடி கேள்வி!

சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவரை 'உங்களுக்கு 30 நிமிட சந்தோசத்தை கொடுக்கும் ஆள் நான் இல்லை' என்று சாட்டையடி பதில் கொடுத்த நடிகை அபர்ணா நாயர்

சுஷாந்த் உள்பட 3 பிரபலங்கள் மறைவு குறித்து சிம்பு அறிக்கை!

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், சிம்புவின் நண்பர் என்பது பலர் அறிந்ததே. அதேபோல் சிம்புவுக்கு நெருக்கமான நண்பர்களான

சீன எல்லையில் மோதல் ஏற்படக் காரணம் என்ன??? இருதரப்புகள் கூறும் விளக்கம்!!!

கடந்த மே மாதம் 5, 6 தேதிகளில் இருந்து இந்திய எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறுகிறது.