கொரோனாவுக்கு ஏற்ற சிகிச்சை முறை… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அசத்தல்!!!
- IndiaGlitz, [Monday,October 19 2020]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவாளியைச் சேர்ந்த அமெரிக்க வாழ் சிறுமிக்கு இளம் விஞ்ஞானிகள் விருது வழங்கி கவுரவிக்கப் பட்டுள்ளது. இவர் கொரோனாவிற்கு ஏற்ற சிகிச்சை முறையைக் கண்டுபிடித்ததாகவும் அதற்காக இவருக்கு இந்திய மதிப்பில் 18 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
டெக்சாஸின் ஃப்ரீங்கோ பகுதியில் வசித்துவரும் 14 வயது சிறுமி அனிகா செப்ரோலு. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதற்கான சிகிச்சை முறைகளிலும் கடும் சிக்கல்கள் நீடிக்கவே செய்கிறது. அந்த வகையில் சிலிகோ முறையின் மூலம் வைரஸின் தலைமை மூலக்கூறுகளைக் கண்டறிந்து அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்ஸ் கோவிட் வைரஸின் கூட்டு புரதத்தை பிணைக்கலாம் என்ற சிகிச்சை முறையை இவர் கண்டறிந்து உள்ளார்.
முதலில் அனிகாவின் மேற்கொண்ட ஆய்வு நேரடியாக கொரோனா வைரஸை பற்றியதாக இல்லாமல் இருந்தது. ஆனாலும் தான் தொடர்ந்த இன்ஃப்ளூயன்ஸா குறித்த ஆய்வின்போது சிலிகோ முறையின் மூலம் இன்ப்ளூயன்ஸா வைரஸின் புரதத்தைத் பிணைக்கக்கூடிய தலைமை மூலக்கூறை அவர் கண்டறிந்து உள்ளார். இவருடைய ஆய்வு இன்ஃப்ளூயன்ஸா புரதத்துடன் பிணைக்கக்கூடிய ஒரு முன்னணி கலவையை அடையாளம் காண்பதாகும். இதனால் கொரோனா சிகிச்சைக்கு எளிமையான முறையை உருவாக்கவும் மேலும் சிகிச்சையை கூடுதல் எளிமையாக்கவும் முடியும் என மருத்துவ உலகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.