நாசாவின் செயல் தலைவர் ஆனார் இந்தியா வம்சவாளி பெண்! குவியும் ஆதிக்கம்!
- IndiaGlitz, [Tuesday,February 02 2021]
கடந்த மாதம் 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவியில் அமர்ந்தார் ஜோ பிடன். இவரோடு முதல் பெண் துணை அதிபர் மற்றும் முதல் அமெரிக்க-இந்திய, அமெரிக்க-தென்ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்ஸும் துணை அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வினால் மட்டுமல்லாது ஜனநாயகக் கட்சி அளித்து வரும் வாய்ப்புகளினால் அமெரிக்க நிர்வாக சபையில் தற்போது இந்தியர்களின் ஆதிக்கம் அதிகத்து வருகிறது.
அந்த வகையில் ஜோ பிடனின் புதிய நிர்வாக சபையில் இதுவரை 20 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் முக்கிய பதவிகளில் இடம்பெற்று உள்ளனர். இதில் பலர் வெள்ளை மாளிகையில் பணியாற்ற உள்ளனர் என்பதும் கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. தற்போது அந்தப் பட்டியலில் இன்னும் ஒரு இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண் இடம் பெறப்போகிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பவ்யா லால் அமெரிக்காவிற்கு சொந்தமான நாசாவின் செயல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் நாசா அணியில் சேர்க்கப்பட்டார். இதற்கு முன்பாக பவ்யா லால் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை திட்டத்திற்காக வெள்ளை மாளிகை அலுவலகத்தில் பணிபுரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.