நிலவில் கால்பதிக்க இருக்கும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட விண்வெளி வீரர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்கா கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்பி பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாசாவின் அடுத்த கனவுத் திட்டம் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நாசா நிலவுக்கு அனுப்ப உள்ள விண்வெளி வீரர்களின் பட்டியலில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அதுவும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு விண்வெளி வீரர் இடம்பெற இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாசா விண்வெளி ஆய்வு மையம் வரும் 2024 ஆம் ஆண்டு ஆர்டெமிஸ் எனும் பெயரில் 18 பேர் கொண்ட விஞ்ஞானிகளின் குழுவை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டு வருகிறது. அந்த வீரர்களின் பெயர் பட்டியலை அமெரிக்காவின் துணை அதிபர் மைன் பென்ஸ் நேற்று வெளியிட்டார். மேலும் இந்த வீரர்களுக்கான பயிற்சியானது புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு கூடம் துவங்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
18 பேர் கொண்ட பெயர் பட்டியலில் உலகிலேயே முதல் முறையாக 9 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் இடம் பெற்று உள்ளனர். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா ஜான் வர்புதூர் சாரி எனும் விண்வெளி வீரர் இடம்பெற இருக்கிறார். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் இவர் பிறந்து வளர்ந்தாலும் இவருடைய தந்தை நம்முடைய ஹைத்ராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஒரு தமிழர் என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 1977 ஆம் ஆண்டு ஜுன் 29 ஆம் தேதி பிறந்த சாரி அமெரிக்கா ஏர் ஃபோர்ஸில் விண்வெளி பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். இவர் நாசாவின் ஆர்டெமிஸ் கனவுத் திட்டத்தின் மூலம் வரும் 2024 ஆம் ஆண்டு நிலவுக்குச் செல்ல இருக்கிறார். இந்த நிகழ்வு இந்தியாவிற்கு பெருமை தேடித்தரும் ஒரு நிகழ்வாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout