உலகின் முன்னணி நிறுவனத்திற்கு CEO-வாகும் மற்றொரு இந்தியர்… குவியும் வாழ்த்து!

  • IndiaGlitz, [Tuesday,March 29 2022]

வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் கூகுள், டிவிட்டர் போன்ற பல மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்களே தலைமை செயல் அதிகாரிகளாக இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் அமெரிக்காவின் பிரபல கூரியர் நிறுவனத்திற்கு கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மற்றொரு இந்தியர் தலைமை செயல் அதிகாரியாகத் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ராஜ் சுப்ரமணியம் மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தில் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பையும் தொடர்ந்து டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஎ பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.

பின்னர் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் பிரபல கூரியர் நிறுவனமான ஃபெடெக்ஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றத் துவங்கி, பின்னர் ஃபெடெக்ஸ் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாகவும் ஃபெடெக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிற்கும் இவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்துவந்த ஃபிரடெரிக் ஸ்மித் பதவி விலகியதை அடுத்து அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜ் சுப்பிரமணியம் பதவி ஏற்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் கீழ் ஃபெடெக்ஸ் எக்ஸ்பிரஸ், ஃபெடெக்ஸ் க்ரவுண்ட், ஃபெடெக்ஸ் ஃப்ரெய்ட், ஃபெடெக்ஸ் லாஜிஸ்டிக்ட் எனப் பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றனர். ஒட்டுமொத்த இந்த நிறுவனத்தின் கீழ் 6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கு ராஜ் சுப்ரமணியம் தலைமை செயல் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டு இருப்பது இந்தியர்கள் மத்தியில் பெருமையாகக் கருதப்படுகிறது.

முன்னதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, Palo Alto networks நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிகேஷ் அரோரா, அடாப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் மற்றும் டிவிட்டர் நிறுவனத்தின் செயல் அதிகாரி பரத் அகர்வால் என ஒட்டுமொத்த மென்பொருள் நிறுவனங்களுக்கும் இந்தியர்களே தலைமை பதவியை வகித்து வருகின்றனர். அந்த வரிசையில் ராஜ் சுப்ரமணியம் தேர்வாகி இருப்பது குறித்து பலரும் பாராட்டுகளைத் தெரிவித்த வருகின்றனர்.

More News

'பீஸ்ட்' படம் குறித்து இயக்குனர் நெல்சனின் மாஸ் அறிவிப்பு!

 தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன .

போட்டியாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் வாழ்த்தி கொண்ட 'பீஸ்ட்' - கே.ஜி.எப் 2' இயக்குனர்கள்!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதியும், யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கே.ஜி.எப் 2'  திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி

ஜிவி பிரகாஷின் 'செல்பி' படம் குறித்து 'எச்சரிக்கை' விடுத்த இயக்குனர் தங்கர்பச்சான்!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'செல்பி' திரைப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து

'செல்பி'யை அடுத்து ஏப்ரலில் ரிலீஸாகும் ஜிவி பிரகாஷின் இன்னொரு படம்!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த 'ஜெயில்' மற்றும் 'பேச்சிலர்' ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து சமீபத்தில் ரிலீசானது. இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி ஜிவி பிரகாஷ் நடிப்பில் மதிமாறன்

சொந்த அண்ணன் கையால் அவுட்டாகிய பரிதாபம்… ஐபிஎல் சுவாரசியங்கள்!

நேற்றைய ஐபிஎல் லீக் போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.