பிரபல விருதை தட்டிச்சென்ற இந்திய-அமெரிக்க சிறுமி!!! குவியும் பாராட்டு!!!

  • IndiaGlitz, [Friday,December 04 2020]

 

பிரபல பத்திரிக்கையான Time இதழ் ஒவ்வொரு ஆண்டும் திறமையான இளம் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்காக Kid of the year விருதை இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சிறுமி கீதாஞ்சலி ராவ் (15) என்பவர் வென்றிருக்கிறார். இதற்கான போட்டியில் 5,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் கீதாஞ்சலி சிறு வயதிலேயே ஒரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளராகவும் எழுத்தாளராகவும் விளம்பரதாரராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இத்தனை சிறிய வயதில் இவ்வளவு திறமைகளா என வியந்துபோகும் அளவிற்கு அவருடைய பேச்சும் இருக்கிறது. கீதாஞ்சலியிடம் பிரபல நடிகையும் உயரிய விருதுகளை பெற்றவருமான ஏஞ்சலினா ஜோலி நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலில் சிறுமி கீதாஞ்சலி,

“அசுத்தமான குடிநீர் முதல் ஒபியாய்டு போதை (Opioid addiction) மற்றும் சைபர் மிரட்டல் வரையிலான சிக்கல்களைச் சமாளிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வியக்க வைக்கும் பணிகள் செய்வதும், உலகளாவிய சமூகத்தை உருவாக்குவதற்கு தேவையான கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற பணிகளை மேற்கொள்வதும் எனது நோக்கம்’‘ எனத் தெரிவித்து உள்ளார்.

More News

பாம்பையே பந்தாடி… குட்டி பப்பியை காப்பாற்றும் சிறுமி… வைரல் வீடியோ!!!

சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு காட்சியில் புல்வெளிக்கு அருகே ஒரு சிறு நாய் குட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது.

நிஷாவை பற்றி டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வரும் வரை நிஷா தன்னுடைய தனித்திறமையை காண்பித்து விளையாடி கொண்டிருந்த நிலையில் அர்ச்சனா வந்த சில நாட்களிலேயே அவர் டம்மியாக்கப்பட்டு அன்பு குரூப்பால்

டெல்லி போராட்டம்… ஆதரவு தெரிவித்து கனடாவில் பேரணி!!!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாநிலங்களில் கடந்த 9 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பூட்டை உடைத்து 200 சவரன் கொள்ளை… மர்ம நபர்கள் கைவரிசை!!!

சென்னை அடுத்த பொன்னேரி பகுதியில் ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டில் 200 சவரன் தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

32 வருஷத்தில் 74 முறை விஷப்பாம்பு கடி… இன்றும் உயிர்வாழும் விசித்திர மனிதன்!!!

ஆந்திரமாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வரும் ஒரு ஏழைத் தொழிலாளி சுப்பிரமணியம். இவருடைய 5 வயதில் முதல் முறையாக பாம்பு கடித்தது எனக் கூறுகிறார்.