பிரபல விருதை தட்டிச்சென்ற இந்திய-அமெரிக்க சிறுமி!!! குவியும் பாராட்டு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பத்திரிக்கையான Time இதழ் ஒவ்வொரு ஆண்டும் திறமையான இளம் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்காக Kid of the year விருதை இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சிறுமி கீதாஞ்சலி ராவ் (15) என்பவர் வென்றிருக்கிறார். இதற்கான போட்டியில் 5,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் கீதாஞ்சலி சிறு வயதிலேயே ஒரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளராகவும் எழுத்தாளராகவும் விளம்பரதாரராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இத்தனை சிறிய வயதில் இவ்வளவு திறமைகளா என வியந்துபோகும் அளவிற்கு அவருடைய பேச்சும் இருக்கிறது. கீதாஞ்சலியிடம் பிரபல நடிகையும் உயரிய விருதுகளை பெற்றவருமான ஏஞ்சலினா ஜோலி நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலில் சிறுமி கீதாஞ்சலி,
“அசுத்தமான குடிநீர் முதல் ஒபியாய்டு போதை (Opioid addiction) மற்றும் சைபர் மிரட்டல் வரையிலான சிக்கல்களைச் சமாளிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வியக்க வைக்கும் பணிகள் செய்வதும், உலகளாவிய சமூகத்தை உருவாக்குவதற்கு தேவையான கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற பணிகளை மேற்கொள்வதும் எனது நோக்கம்’‘ எனத் தெரிவித்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments