இந்திய தாக்குதலால் எந்த சேதமும் இல்லை: பாகிஸ்தான் ராணுவ தளபதியின் அண்டப்புழுகு
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று அதிகாலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. குறிப்பாக பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இந்தியாவை தாக்க வந்த பாகிஸ்தான் விமானங்கள் மிராஜ் 2000 வகை போர் விமானங்களின் அணிவகுப்பு அளவைப் பார்த்து பயந்து திரும்பிவிட்டன. உண்மை இவ்வாறிருக்க பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிஃப் கபூர் தனது டுவிட்டரில் அண்டப்புழுகு ஆகாசப்புழுகு ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
"இந்திய விமானப்படை எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. ஆனால், பாகிஸ்தான் விமானப் படை உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியது. இதனால், இந்திய விமானங்கள் திரும்பிச் சென்றன. முஸாஃபராபாத் செக்டாரில் இந்திய விமானங்கள் அத்துமீறி நுழைந்தபோது உரிய நேரத்தில் பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்க அவசர அவசரமாக வெற்று இடத்தில் வெடிபொருளை போட்டுவிட்டு இந்திய விமானங்கள் தப்பியோடின. பாலாகோட் பகுதியில் வெடிபொருள் விழுந்துள்ளது. இதில் எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை. பொருட்சேதமும் இல்லை. மேலும், தொழில்நுட்பத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன" என அடுத்தடுத்த தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
Indian aircrafts’ intrusion across LOC in Muzafarabad Sector within AJ&K was 3-4 miles.Under forced hasty withdrawal aircrafts released payload which had free fall in open area. No infrastructure got hit, no casualties. Technical details and other important information to follow.
— Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) February 26, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments