இந்திய தாக்குதலால் எந்த சேதமும் இல்லை: பாகிஸ்தான் ராணுவ தளபதியின் அண்டப்புழுகு

  • IndiaGlitz, [Tuesday,February 26 2019]

இன்று அதிகாலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. குறிப்பாக பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் இந்தியாவை தாக்க வந்த பாகிஸ்தான் விமானங்கள் மிராஜ் 2000 வகை போர் விமானங்களின் அணிவகுப்பு அளவைப் பார்த்து பயந்து திரும்பிவிட்டன. உண்மை இவ்வாறிருக்க பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிஃப் கபூர் தனது டுவிட்டரில் அண்டப்புழுகு ஆகாசப்புழுகு ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:

இந்திய விமானப்படை எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. ஆனால், பாகிஸ்தான் விமானப் படை உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியது. இதனால், இந்திய விமானங்கள் திரும்பிச் சென்றன. முஸாஃபராபாத் செக்டாரில் இந்திய விமானங்கள் அத்துமீறி நுழைந்தபோது உரிய நேரத்தில் பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்க அவசர அவசரமாக வெற்று இடத்தில் வெடிபொருளை போட்டுவிட்டு இந்திய விமானங்கள் தப்பியோடின. பாலாகோட் பகுதியில் வெடிபொருள் விழுந்துள்ளது. இதில் எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை. பொருட்சேதமும் இல்லை. மேலும், தொழில்நுட்பத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என அடுத்தடுத்த தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

More News

உறவினர்கள் கூண்டோடு காலி! மசூர் அசார் தப்பி ஓட்டம்

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய வான்படை அதிரடி தாக்குதல் நடத்தி

பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை சரிவு

பாகிஸ்தானில் இன்று அதிகாலை இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை முற்றிலும் அழித்த நிலையில் இந்த தாக்குதல்

இந்திய விமானப்படையினர் நன்றாக விளையாடியுள்ளனர்: சேவாக்

இந்திய விமானப்படை இன்று பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அடித்து நொறுக்கியுள்ள நிலையில் இந்திய படைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

குஜராத் மீது ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

புல்வாமா தாக்குதலுக்கு இன்று அதிகாலை இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையிடம்

இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து உள்துறை செயலாளர் விளக்கம்

புல்வாமா தாகுதலுக்கு பதிலடியாக இன்று இந்திய விமானம் பாகிஸ்தானுக்குள் புகுந்து எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தது.