இந்திய நடிகைகள் ரொம்ப மோசம்: பிரபல நடிகை குற்றச்சாட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்டு என்பவர் போலீஸ் அதிகாரி ஒருவரால் காலால் மிதித்து கொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாலிவுட் நடிகர் நடிகைகள் பலர் குரல் கொடுத்தனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக பிரியங்கா சோப்ரா, திஷா படானி, சோனம் கபூர் உள்பட பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் இது குறித்து பிரபல பாலிவுட் நடிகையும் இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வரும் ’தலைவி’ படத்தின் நாயகியான கங்கனா ரனாவத் கூறியபோது ’இந்திய நடிகர்கள் பெரும்பாலும் வெட்கமே இல்லாமல் கபட நாடகம் ஆடுபவர்கள். இவர்கள் கருப்பினத்தவர்களுக்கு எதிராக இனவெறி குறித்து பேசிக் கொண்டே சிவப்பழகு கிரீம்களுக்கு விளம்பரம் செய்து வருகின்றனர். மில்லியன் கணக்கான டாலர்கள் சிவப்பழகு கிரீம்கள் மூலம் சம்பாதித்துக்கொண்டு இனவெறி குறித்து இவர்கள் பேசுவதை ஏன் யாருமே கேள்வி கேட்பதில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், ‘நான் எந்த கிரீம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும் எனது சகோதரி மாநிறம் கொண்டவர் என்றாலும் அழகானவர் என்றும் நான் அழகு கிரீம் விளம்பரத்தில் நடித்தால் நான் என் சகோதரியை அவமானப்படுத்துவது சமம் என்றும் கூறினார். என சகோதரிக்காகவே இதை செய்ய முடியவில்லை என்றால் நாட்டுக்காக எப்படி செய்ய முடியும்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய நடிகர்-நடிகைகள் குறிப்பாக பாலிவுட் நடிகைகள் குறித்து கங்கனா ரணவத் கூறிய இந்த கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments