இந்த இரண்டு தான் கமல்ஹாசனின் உலகம்.. 'இந்தியன்' நடிகையின் நெகிழ்ச்சியான பதிவு.!

  • IndiaGlitz, [Tuesday,July 02 2024]

‘இந்தியன்’ படத்தில் நடித்த நடிகை சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இந்த இரண்டும் தான் கமல்ஹாசனின் உலகம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘இந்தியன்’ திரைப்படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ‘இந்தியன்’ படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்த மனிஷா கொய்ராலா ’இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனிஷா கொய்ராலாவை ஷங்கர் சந்தித்த புகைப்படம் வெளியானதால், இந்த படத்தில் மனிஷா கொய்ராலா நடித்து இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஷங்கரை அடுத்து தற்போது கமல்ஹாசனும் மனிஷா கொய்ராலா சந்தித்துள்ளார். இருவரும் இணைந்த புகைப்படத்தை மனிஷா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து ’கமலஹாசனின் உலகம் புத்தகம் மற்றும் திரைப்படம் ஆகிய இரண்டு மட்டுமே. மனதையும் ஆன்மாவையும் சீர்திருத்தும் சிறந்த புத்தகங்களை எனக்காக அவர் பரிந்துரை செய்துள்ளார்.

நாங்கள் இருவரும் எப்போது சந்தித்தாலும் அவரை பார்த்து நான் வியந்து கொண்டே தான் இருக்கிறேன். நீண்ட நேரம் சினிமா புத்தகங்கள் குறித்து அவருடன் பேசியதில் எனக்கு மகிழ்ச்சி. என்னை சந்திக்க வந்த கமல் அவர்களுக்கு எனது நன்றிகள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.