'இந்தியன் 2' படத்தில் கேமியோ ரோலில் 'இந்தியன்' நடிகை.. ஷங்கரின் வேற லெவல் பிளான்..!

  • IndiaGlitz, [Wednesday,April 10 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். மேலும் சமீபத்தில் இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் மற்ற பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாகவும் திட்டமிட்டபடி ஜூன் மாதம் வெளியிட ஷங்கர் தீவிர பணிகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே கமல்ஹாசன் உடன் எஸ்ஜே சூர்யா, சித்தார்த், காளிதாஸ் ஜெயராம், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் மற்றும் மறைந்த நடிகர்கள் நெடுமுடி வேணு, விவேக், நடித்துள்ள நிலையில் தற்போது ’இந்தியன்’ படத்தில் நடித்த மனிஷா கொய்ராலா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் மும்பையில் மனிஷா கொய்ராலாவை ஷங்கர் சந்தித்தபோது அந்த சிறப்பு தோற்ற கேரக்டர் குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மனிஷா கொய்ராலாவும் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து மனிஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ’இந்தியன்’ படத்தில் மனிஷா கொய்ராலா கமலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நடித்த நிலையில் அந்த கேரக்டரை சிறிய அளவில் ’இந்தியன் 2’ படத்தில் பயன்படுத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளது வேற லெவலில் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே போல் ’இந்தியன்’ படத்தில் சப்னா என்ற கேரக்டரில் நடித்த ஊர்மிளாவும் ’இந்தியன் 2’ படத்தில் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கமல் படத்தில் மாஸ் கேரக்டர்.. ரஜினி படத்தில் காமெடியன்.. பகத் பாசில் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தில் ஒரு மாஸ் கேரக்டரில் நடித்த நடிகர் பகத் பாசில், ரஜினி நடித்து வரும் 'வேட்டையன்' திரைப்படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுவது

மகாபலிபுரம் ரிசார்ட்.. கையில் சரக்கு.. கால் கொலுசில் கவிதை.. 42 வயது நடிகையுடன் 'டாக்டர்' பட நடிகர்..!

கடந்த சில ஆண்டுகளாக டாக்டர் பட நடிகர், 42 வயது நடிகையை காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் அவர்களது போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் பட தயாரிப்பாளர் காலமானார்..  ரஜினி உள்பட பிரபலங்கள் இரங்கல்..!

மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்கள் நடித்த படங்களை தயாரித்தவரும் பிரபல அரசியல்வாதியுமான

இந்த அறிகுறி எல்லாம் இருந்தால் கண் கேன்சரா ?

முதலில் நாம் அதை பற்றி தேடுவது ஆராய்வது எல்லாம் கூகுள் தான்.அதில் தேடி எனக்கு இது தான் பிரச்சினை என அவர்களே முடிவு செய்து விடுவார்கள்.இந்த மாதிரியான செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்...

எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் பதில் சொன்னது காலம்.. விஷ்ணு விஷால் பகிர்ந்த ஆச்சரிய புகைப்படம்..

எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்வது காலம் ஒன்று தான் என்று நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் கூறி ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில்