தாமதமாகும் 'இந்தியன் 2' ரிலீஸ்.. முந்துகிறது ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,September 09 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் கிட்டத்தட்ட இந்த படத்திற்கு இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு முன்பே ரஜினியின் ’தலைவர் 170’ சிவகார்த்திகேயனின் ’எஸ்கே 21’ மற்றும் சூர்யாவின் ’கங்குவா’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகிவிடும் என தெரிகிறது. ‘இந்தியன் 2’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி அதிகமாக இருப்பதால் கிட்டத்தட்ட 10 மாத காலங்கள் ஆகும் என்பதால் தான் ஆகஸ்ட் 15ஆம் தேதியை படக்குழுவினர் லாக் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசன், விவேக், சித்தார்த், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரக் கூட்டம் ’இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

More News

'தளபதி 68' பூஜை, படப்பிடிப்பு எப்போது? மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள  'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ஆன 'தளபதி 68' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை

வெளியீட்டிற்கு முன்னரே முன்பதிவில் மிகப்பெரும் சாதனை செய்த 'லியோ'..!

இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் "லியோ" திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது.

'லியோ'வுக்கு முன்பே வெளியாகும் த்ரிஷாவின் இன்னொரு படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தளபதி விஜய்யுடன் த்ரிஷா நடித்த 'லியோ' என்ற திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முன்பே த்ரிஷா நடித்த 'தி ரோடு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

மறைந்த ஜி மாரிமுத்துவின் குடும்பத்திற்கு அஜித் செய்த மிகப்பெரிய உதவி.. மறைவுக்கு பின் வெளியான தகவல்..!

தமிழ் திரை உலகம் மற்றும் சின்னத்திரை உலக குணச்சித்திர நடிகர் ஜி மாரிமுத்து இன்று எதிர்பாராத வகையில் மாரடைப்பில் காலமானது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளராக 'குக் வித் கோமாளி பிரபலம்? வைரல் புகைப்படம்..!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஏழாவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோ வீடியோக்கள் வெளியாகின என்பதும் அதில்