close
Choose your channels

'இந்தியன் 2' படத்தின் VFX காட்சிகள்: வேற லெவல் புகைப்படம் வெளியிட்ட ஷங்கர்..!

Sunday, July 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் VFX காட்சிகளின் பணிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் ஷங்கர் அந்த நிறுவனத்திற்கு நேரடியாக சென்று VFX பணிகள் நடைபெறும் காட்சி குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வேற லெவலில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ’இந்தியன் 2’ திரைப்படத்தில் இதுவரை தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே பார்த்திராத VFX காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், விவேக், சித்தார்த், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரக் கூட்டம் ’இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளது.

ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment