இது 2வது சுதந்திர போர்.. காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில நான்: 'இந்தியன் 2' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டு நிமிடங்களுக்கு மேலான டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
படிப்புக்கேற்ற வேலை இல்லை, ஊராடா இது, என்று மக்கள் அலுத்து கொண்டிருக்கும் நிலையில் எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஊழல், திருட்டு என மக்கள் கொந்தளிக்கின்றனர். ஆனால் சிஸ்டம் சரியில்லை என்று வீட்டுக்குள்ளே இருந்தால் எப்படி சரியாகும், இதையெல்லாம் திருத்த ஒருவர் வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் தான் இந்தியன் தாத்தா மீண்டும் வந்து ஊழல்வாதிகளை தனது பாணியில் அடித்து நொறுக்குகிறார். காந்திய வழியில் நீங்கள், நேதாஜி வழியில் நான், இது இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று இந்தியன் தாத்தா வசனம் பேசி தீயவர்களை அழித்து, நல்லவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்.
முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா ஒரே கெட்டப்பில் மட்டுமே வந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் இந்தியன் தாத்தா கமல்ஹாசன் ஐந்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் வருகிறார் என்பது இந்த ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது. அதேபோல் சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகிய இருவருக்கும் முக்கிய கேரக்டர் என்றும் பிரியா பவானி சிங் கேரக்டரும் அழுத்தமாக அமைந்திருப்பது ட்ரெய்லரில் உள்ள காட்சிகள் இருந்து தெரிய வருகிறது.
ஷங்கரின் பிரமாண்டமான இயக்கம், அனிருத்தின் ஆக்ரோஷமான பின்னணி இசை, அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகள் என ஒவ்வொரு ஷாட்டும் இந்த படம் கடினமான உழைப்பினால் செதுக்கப்பட்டுள்ளது என்பது ட்ரைலர் இருந்து தெரிய வருகிறது. மொத்தத்தில் ’இந்தியன்’ முதல் பாகத்தை விட ’இந்தியன் 2’ மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருப்பதை அடுத்து மிக பெரிய வெற்றி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com