'இந்தியன் 2' படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.1 கோடி: கமல் வழங்கினார்.
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி படப்பிடிப்பு தளத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கிரேன் ஆபரேட்டர் உள்பட 4 பேர் பலியாகினர். ஷங்கர், கமல், காஜல் அகர்வால் உள்பட முக்கிய பிரபலங்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் அவர்கள் அனைவரும் நூலிழையில் உயிர் தப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. கமலஹாசன், லைகா நிறுவனம், ஷங்கர் ஆகியோர் இந்த நிதி உதவியை செய்வதாக அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து கடந்த சில மாதங்களாக இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வந்ததால் விபத்தில் உயிரிழந்துள்ளவர்களுக்கு இந்த பணத்தை கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று பெப்சி அலுவலத்தில் நான்கு பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி பணம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை கமல், நான்கு பேர்களின் குடும்பத்தினர்களிடம் கொடுத்தார். இந்த நிகழ்ச்சியின்போது பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் ஷங்கர், லைகா நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments