close
Choose your channels

நிறைவு கட்டத்தை நெருங்கிவிட்டது 'இந்தியன் 2' படப்பிடிப்பு: ரிலீஸ் குறித்த மாஸ் தகவல்..!

Monday, June 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம்.

ஏற்கனவே கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இந்த மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகளும் வெளிநாட்டில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முக்கியமான படம் என்று கூறப்படும் ’இந்தியன் 2’ படத்தை பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் மெயின் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார்.

ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment