'இந்தியன் 2' செகண்ட் சிங்கிள்.. இந்த முறை அனிருத்தின் துள்ளலான ரொமான்ஸ் பாடல்..!

  • IndiaGlitz, [Monday,May 27 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் சமீபத்தில் தான் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜூலை 12ஆம் தேதி ’இந்தியன் 2’ படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் இந்த படத்தின் ’பாரா’ என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் மே 29ஆம் தேதி ’இந்தியன் 2’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்புடன் சித்தார்த் மற்றும் ராகுல் பிரீத்தி சிங் ஸ்டில் ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த பாடல் இருவருக்கும் ஆன டூயட் துள்ளல் பாடலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

 

More News

ரஜினியின் அடுத்த படத்தில் சத்யராஜ்? அதுவும் இந்த கேரக்டரிலா? சம்பவம் செய்யும் லோகேஷ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'கூலி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில்

பிரபல தமிழ் திரைப்பட  இயக்குனர் திடீர் மறைவு.. எக்ஸ் தளத்தில் சரத்குமார் இரங்கல்..!

சரத்குமார் நடித்த இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திடீரென காலமானதை அடுத்து சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

'கோட்' படத்தில் விஜய் தரும் இரட்டை விருந்து.. யுவன்ஷங்கர் ராஜா சூப்பர் அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தில் அவர் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளிக்க இருப்பதாக யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் அப்டேட் கொடுத்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குழந்தைகளோடு குழந்தையாக மாறி விட்ட சிம்பு.. 'தக்லைஃப்' படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படம்..!

'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த போது குழந்தைகளுடன் சிம்பு எடுத்த புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது..

பாண்டிச்சேரியில் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு.. யாருடைய காட்சிகள் படமாக்கப்படுகிறது தெரியுமா?

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் யாருடைய காட்சியின் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பது குறித்த தகவல்