கமல்ஹாசனின் 'இந்தியன் 2' ரிலீஸ் தகவல்.. அட்டகாசமான போஸ்டருடன் அறிவித்த லைகா..!

  • IndiaGlitz, [Saturday,April 06 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ’இந்தியன் 2’ படத்தின் முக்கிய அப்டேட் வெளிவர இருப்பதாக ஷங்கர் ஏற்கனவே இன்று காலை அறிவித்திருந்த நிலையில் சற்று முன் அந்த அறிவிப்பு வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘இந்தியன் 2’ திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதுதான் இன்றைய அட்டகாசமான அறிவிப்பு ஆகும். இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஜூன் 14 அல்லது 21 ஆகிய தேதிகளில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளதை அடுத்து இந்தியா முழுவதும் தேர்தல் முடிந்த பின்னர், தேர்தல் முடிவுகளும் வெளியான பின்னர் தான் ரிலீசாகும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் அது தற்போது உண்மையாகி உள்ளது.

இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கும் என்றும் அது மட்டுமின்றி இந்த படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் அடுத்த படம் எந்த மொழியில்? கசிந்த தகவல்..!

தல தோனி சமீபத்தில் தோனி என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார் என்பதும் இந்த நிறுவனத்தின் முதல் படமே ஒரு தமிழ் படம் என்பது தெரிந்தது. இந்நிலையில் அடுத்ததாக இந்நிறுவனத்தின்

நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் அம்மா ஷோபாவை சந்தித்த நடிகை.. எமோஷனல் பதிவு..!

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யின் அம்மா ஷோபாவை சந்தித்ததாக எமோஷனலாக நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் வீட்டில் விசேஷம்.. வைரல் புகைப்படங்கள்..!

சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் வீட்டில் விசேஷம் நடந்ததை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.

இன்று 'கோட்' பிரசாந்த் பிறந்தநாள்.. வாழ்த்து கூறினாரா தளபதி விஜய்?

தளபதி விஜய் நடித்து 'கோட்' கோட் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பிரசாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள்

குதிரை சவாரி பயிற்சி பெற்று வரும் நடிகர் சூர்யா.. காரணம் இதுதான்..!

சூர்யாவின் 44வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்காக அவர் குதிரை சவாரி பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.