ரிலீசுக்கு பின்னரும் பிரச்சனையை சந்திக்கும் 'இந்தியன் 2'.. தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்..!

  • IndiaGlitz, [Thursday,August 29 2024]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2 ’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு பின்னரும் பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு திரைப்படம் ஹிந்தியில் வெளியாகும் போது அந்த படம் தியேட்டரில் வெளியாகிய 8 வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் வெளியாக வேண்டும் என்பது மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்களின் விதிமுறையாக உள்ளது.

ஆனால் அந்த விதிமுறையை மீறி ’இந்தியன் 2’ படத்தின் ஹிந்தி பதிப்பான ’ஹிந்துஸ்தானி 2’ திரைப்படம் ஒரே மாதத்தில் வெளியாகி உள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, ‘இந்தியன் 2’ தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

8 வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் வெளியிடுவோம் என்ற ஒப்பந்தத்தை மீறியதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் இந்த நோட்டீஸ்க்கு தயாரிப்பு நிறுவனம் என்ன பதில் அளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

More News

திருமலை நம்பியின் அற்புத வாழ்க்கை வரலாறு!

பிரபல ஆன்மீக சிந்தனையாளர் ஸ்ரீகவி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் வெளியிட்டுள்ள தனது சமீபத்திய வீடியோவில், மஹான்கள் பற்றிய ஆழமான தத்துவங்களைப் பகிர்ந்துள்ளார்.

ரஜினியின் 'கூலி' திரைப்படத்தில் இன்னொரு மாஸ் நடிகர்.. இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கவே இல்லையே..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தில் மாஸ் நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி அது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில்

எதிர்பார்த்த அதே தேதி தான்.. 'விடுதலை 2' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

வெற்றி மாறனின் 'விடுதலை 2' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ ரிலீஸ்

நீங்கள் எவ்வளவு பெரிய மோசடியாளர் என்பது உலகத்திற்கே தெரியும்.. யாரை சொல்கிறார் ஸ்ரீரெட்டி?

நீங்கள் எவ்வளவு பெரிய மோசடியாளர் என்பது இந்த உலகத்திற்கே தெரியும் என நடிகை ஸ்ரீ ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாழை'யை சொல்லி கோழைகளாக்க வேண்டாம்.. மாரி செல்வராஜுக்கு பிரபல அரசியல் தலைவர் கோரிக்கை..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் குறித்து   புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது முகநூல் பக்கத்தில்