'இந்தியன் 2' திரைப்படம் எவ்வளவு நேரம் ட்ரிம் செய்யப்பட்டது.. லைகாவின் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் ட்ரிம் செய்யப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சற்றுமுன் லைகா நிறுவனம் இந்த படத்தின் சில காட்சிகள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த 12ஆம் தேதி வெளியானது.
இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் பொதுவான குற்றச்சாட்டாக படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. அதனை அடுத்து இந்த படத்தின் 20 நிமிட காட்சிகள் கட் செய்யப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில் ஷங்கர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ’இந்தியன் 2’ படத்தின் 12 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரிம் செய்யப்பட்ட புதிய வெர்ஷன் இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் பிறகு ’இந்தியன் 2 ’ படம் பிக்கப் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Witness the enhanced version of #Indian2 🇮🇳✂️ Now presenting a streamlined edition trimmed by 12 min. Catch it in cinemas near you for a crisper experience! 💥@IndianTheMovie 🇮🇳 Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh #Siddharth @actorsimha @anirudhofficial @dop_ravivarman… pic.twitter.com/0reMKOvMIe
— Lyca Productions (@LycaProductions) July 17, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments