'இந்தியன் 2' திரைப்படம் எவ்வளவு நேரம் ட்ரிம் செய்யப்பட்டது.. லைகாவின் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,July 17 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் ட்ரிம் செய்யப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சற்றுமுன் லைகா நிறுவனம் இந்த படத்தின் சில காட்சிகள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த 12ஆம் தேதி வெளியானது.

இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் பொதுவான குற்றச்சாட்டாக படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. அதனை அடுத்து இந்த படத்தின் 20 நிமிட காட்சிகள் கட் செய்யப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில் ஷங்கர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ’இந்தியன் 2’ படத்தின் 12 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரிம் செய்யப்பட்ட புதிய வெர்ஷன் இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் பிறகு ’இந்தியன் 2 ’ படம் பிக்கப் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

More News

ஒரே இடத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா, சூர்யா- ஜோதிகா, மகேஷ்பாபு.. குவியும் கமெண்ட்ஸ்..!

ஒரே புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா,  சூர்யா - ஜோதிகா,  மகேஷ் பாபு - நர்மதா, ஜெனிலியா, பிரித்விராஜ் உள்பட பல பிரபலங்கள் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ரசித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி ஆவேசம்.. மஞ்சு வாரியர் ரொமான்ஸ்.. அசர வைக்கும் 'விடுதலை 2' ஃபர்ஸ்ட் லுக்..!

விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு

மிஷ்கின் படத்தில் இணைகிறார் கமல்ஹாசன் மகள்.. 2 பேரும் சேர்ந்து என்ன பண்ண போறாங்க தெரியுமா?

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில்  கமல்ஹாசன் மகள்  ஸ்ருதிஹாசன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஓர் மாம்பழ சீசனில்'.. 'பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த படம்.. பர்த்டே பேபி தான் ஹீரோ..!

இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் பிரபல நடிகரின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும்

பிரம்மாண்டமாக நடைபெற்றது விஜய் நட்சத்திர கொண்டாட்டம்.. கலந்து கொண்டவர்கள் யார் யார்?

விஜய் நட்சத்திர கொண்டாட்டம் கடந்த வாரம் 14, 15 ஜூலை 2024, விருத்தாசலம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இதில் ஏராளமான ரசிகர்கள்