இணையத்தில் வைரலாகும் 'இந்தியன் 2' படத்தின் கதை! 

  • IndiaGlitz, [Monday,August 26 2019]

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனவுடனே அந்த திரைப்படம் இன்டர்நெட்டில் வெளியாகி வசூலில் பெரும் பகுதியைப் பாதித்து வரும் நிலையில் தற்போது இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வரும் போதே இன்டர்நெட்டில் அந்த படத்தின் கதை மற்றும் ஸ்டில்கள் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் கதை குறித்த ஒரு வதந்தி இன்டர்நெட்டில் பரவி வருகிறது. சமூக ஆர்வலர் சித்தார்த் மனைவி ரகுல் ப்ரீத்திசிங் உடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அவர், தன்னுடைய யூடியூப் சேனலில் அரசியல்வாதிகளின் ஊழலை அம்பலப்படுத்துகிறார். இதனால் அவருக்கு மிரட்டல்கள் வருகிறது

இதனை கேள்விப்பட்டு வெளிநாட்டிலுள்ள கமல்ஹாசன் இந்தியா வந்து, சித்தார்த்திடம் ஊழல் அரசியல்வாதிகளின் பாட்டிலை வாங்கி ஒவ்வொருவராக தனது வர்மக்கலை மூலம் கொலை செய்கிறார். கமல்ஹாசனின் இந்த முயற்சிக்கு சித்தார்த் மற்றும் வர்ம கலை நிபுணரான காஜல் அகர்வால் ஆகியோர் உதவி செய்கின்றனர். இதனை அடுத்து கமலை பிடிக்க போலீசார் வலை விரிப்பதாகவும், அந்த வலையில் கமல்ஹாசன் சிக்கினாரா? என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது
 

More News

ஜிவி பிரகாஷின் 'டக்கரு பார்வை' ரிலீஸ் குறித்த தகவல்!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்துக் கொண்டு வருவதால் அவர் நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள், புரமோஷன்கள் தினமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

'காப்பான்' திரைப்படத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் 'காப்பான்'.

மீண்டும் தல-தளபதி படங்கள் மோதுகிறதா?

கடந்த 2014ஆம் ஆண்டு தல அஜித் நடித்த 'வீரம்' மற்றும் தளபதி விஜய் நடித்த 'ஜில்லா' ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

நான் சண்டை போட்டா, நீங்க கேம் விளையாட மாட்ட! கவின் - லாஸ்லியா உரையாடல்

பிக்பாஸ் வீட்டில் இன்று கவினை பெரும்பாலானோர் நாமினேட் செய்துள்ள நிலையில் அடுத்த புரமோவில் கவின், லாஸ்லியா இடையே நடைபெறும் உரையாடல் இடம்பெற்றுள்ளது

விஜயகாந்த் பிறந்த நாள் விழாவில் கதறி அழுத மகன் பிரபாகரன்

கேப்டன் விஜயகாந்த் நேற்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவருடைய இல்லத்திற்கு நேற்று ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.