'இந்தியன் 2' படத்தின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகளின் தகவல்கள்

  • IndiaGlitz, [Wednesday,October 30 2019]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக இந்த படப்பிடிப்பு சென்னை மற்றும் ராஜமுந்திரியில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்டமாக போபால் நகரில் நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த படப்பிடிப்பின் போது சுமார் 90 வயது கேரக்டரில் கமல்ஹாசன் நடித்து வருகிறார் என்றும், சுமார் 2 ஆயிரம் துணை நடிகர்களுடன் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் போபாலில் நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்ட நிலையில், இன்று முதல் குவாலியர் நகரில் இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த நகரில் குவாலியரில் 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

மேலும் இந்த படப்பிடிப்பை அடுத்து தைவான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு படக்குழுவினர் செல்ல உள்ளதாகவும் அங்கு பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது

இந்தியன் படத்தில் கிளைமாக்ஸ் முடிந்தவுடன் வயதான தோற்றத்தில் வெளிநாட்டில் இருந்து தொலைபேசியில் கமல்ஹாசன் பேசுவது போல் படம் முடித்திருக்கும். அதன் தொடர்ச்சி காட்சிகள் தைவான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

More News

கடன் வாங்கி விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்!

விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் முதல் வார இறுதியில் மட்டும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல்

அட்லிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பாலிவுட் பிரபலம்!

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிய பிகில் திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியாகி

'இந்தியன் 2' படத்தில் இணையும் 'கைதி' பட நடிகர்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்

கனமழை எதிரொலி: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மிதமான, கனமழை பெய்து வரும்

நீட், பேனர் மற்றும் ஆழ்துளையால் பலியான உயிர்கள்!

தமிழகத்தில் ஒரு மரணம் ஏற்பட்டால் மட்டுமே ஒரு பிரச்சனை குறித்து அதிகமாக பேசும் வழக்கம் கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது