'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா.. எங்கே? எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஜூலை மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக அனிருத் கம்போஸ் செய்த இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆன நிலையில் தற்போது அடுத்த கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தேதி, இடம் ஆகிய தகவல்கள் லைக்கா நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ’இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் அன்று மாலை 6 மணிக்கு பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் ’இந்தியன் 2’ திரைப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
Get set for a grand affair! 🏟️ The INDIAN-2 🇮🇳 Audio Launch is happening on June 1st at Nehru Stadium, 📍 6 PM onwards. 🥁 Gear up for an unforgettable evening! 🤩#Indian2 🇮🇳 #Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial #Siddharth @Rakulpreet @LycaProductions… pic.twitter.com/dRaNuV9dQe
— Lyca Productions (@LycaProductions) May 30, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments