ரொம்ப ஸ்லோவா இருக்குது.. தாமரையின் கவிதை வரிகள் சூப்பர்.. 'இந்தியன் 2' பாடலுக்கு கமெண்ட்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகும் ’இந்தியன் 2 ’ படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
சித்தார்த் மற்றும் ராகுல் பிரீத் சிங் காட்சிகளுக்காக இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். அபி வி மற்றும் ஸ்ருதிகா சமுத்திராலா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ள இந்த பாடல் மெலடி பாடலாக அமைந்துள்ளது.
அனிருத்திடம் இருந்து ஒரு துள்ளலான பாடலை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த பாடல் மிகவும் மெதுவாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் கவிதை போல் இருப்பதாகவும் தாமரை ரசித்து ரசித்து எழுதி இருப்பதாகவும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது
மொத்தத்தில் இந்த பாடலை கேட்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள். இந்த பாடலுக்காக தாமரை எழுதிய சில வரிகள் இதோ:
நீலோற்பம் நீரில் இல்லை
ஏன் தாண்டினாய் இல்லை
இனியேதும் தடங்கல் இல்லை
எப்போதும் நெஞ்சில் துள்ளி
தூக்கங்களும் இல்லை
இதை மீறி புகார்கள் இல்லை
நெருங்கி நீ நீரில்
முத்தங்கள் தராத போதும்
எரிந்திடும் முத்தம் காற்றிலே
வந்தாக வேண்டும், தடுக்கி நீ விழவேண்டும்
என்று கூட ஆசை உண்டு தான்
தடுத்து நான் தாங்கி கொண்டு
தூக்கி செல்ல வேண்டும் என்று தான்
மாறா மனமிருந்தும் ஒன்றாய் சேர்வதென்ன
தீரா தவிப்புகளும் தானாய் சேர்ந்ததென்ன
நீயின்றி நானில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments