'இந்தியன் 2' படத்தின் பணியை தொடங்கிய ஷங்கர்

  • IndiaGlitz, [Monday,August 27 2018]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ரஜினியின் '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் லொகேஷன் பார்க்கும் பணியை ஷங்கர் தொடங்கிவிட்டார். ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் லோகேஷன் பார்க்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளதால் 'சேனாதிபதி' மீண்டும் திரையில் தோன்ற தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவான 'இந்தியன்' திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்த நிலையில் 'இந்தியன் 2' திரைப்படமும் வசூலில் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.