4 பிரபல நடிகர்களுக்கு கடைசி படமாகி போன 'இந்தியன் 2.. பெரும் சோகம்..!

  • IndiaGlitz, [Saturday,November 04 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் இண்ட்ரோ வீடியோ வெளியான நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் வெளியான ஒரு சில மணி நேரத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கை தாண்டிவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நான்கு பிரபல நடிகர்கள் காலமாகிவிட்டதால் அவர்களின் கடைசி படமாக ’இந்தியன் 2 ’அமைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘இந்தியன்’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த நெடுமுடி வேணு, இரண்டாம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார்.

இதனை அடுத்து முதல் முதலாக கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் விவேக். அவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி காலமானார். மேலும் நடிகரும் இயக்குனருமான மனோபாலாவும் ’இந்தியன் 2’ படத்தில் நடித்திருந்த நிலையில் அவர் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி காலமானார்.

அதேபோல் ’எதிர்நீச்சல்’ நடிகரான ஜி மாரிமுத்து ’இந்தியன் 2’படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அவர் கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி காலமானார்

மேற்கண்ட நான்கு பிரபல நடிகர்களுக்குமே ’இந்தியன் 2’ படம் கடைசி படமாக அமைந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.