close
Choose your channels

'இந்தியன் 2' விவகாரம்: இயக்குநர் ஷங்கருக்கு எதிரான லைகாவின் மனுக்கள் தள்ளுபடி!

Friday, July 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த ’இந்தியன் 2’ படம் குறித்த வழக்கில் லைகா நிறுவனம் தாக்கல் செய்த இரண்டு இடைக்கால மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன

’இந்தியன் 2’ குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் ஷங்கர் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க கூடாது என்றும் உத்தரவாதத் தொகை செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து லைகா நிறுவனம் இரண்டு இடைக்கால மனுக்களை தாக்கல் செய்தது. இந்த இரண்டு இடைக்கால மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் சற்றுமுன் தள்ளுபடி செய்தது

ஆனால் அதே நேரத்தில் ’இந்தியன் 2’ பட விவகாரம் குறித்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த வழக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள் என்பதும் தெரிந்ததே. அவர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ’இந்தியன் 2’ படத்தின் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment