'இந்தியன் 2', 'கேம் சேஞ்சர்' என 2 படக்குழுவினர்களும் கேக் வெட்டி கொண்டாட்டம்.. ஷங்கருக்கு என்ன விசேஷம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷங்கர் தற்போது ஒரே நேரத்தில் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ மற்றும் ராம்சரண் தேஜாவின் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார் என்பதும் இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் ’இந்தியன் 2’ மற்றும் ’கேம் சேஞ்சர்’ ஆகிய திரைப்படங்களில் பணிபுரிந்த உதவி இயக்குனர்கள் இணைந்து ஷங்கருக்கு வாழ்த்து கூறி கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ’ஜென்டில்மேன்’ திரைப்படம் கடந்த 1993ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதனை அடுத்து ’ஜென்டில்மேன்’ படத்தின் 30-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் தான் ’கேம் சேஞ்சர்’ மற்றும் ’இந்தியன் 2’ படத்தின் உதவி இயக்குனர்கள் சிறப்பு விழா எடுத்து ஷங்கருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த 30 வருடங்களில் கமல், ரஜினி, விஜய், விக்ரம், அர்ஜூன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ள ஷங்கருக்கு ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments