close
Choose your channels

பட்டாசு இல்லை, அழைப்பிதழ் கூட இல்லை.. பசுமைத் திருமணம் செய்யும் 'இந்தியன் 2' நடிகை..!

Sunday, February 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த வரும் ’இந்தியன் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை வரும் 21ஆம் தேதி திருமணம் செய்ய இருக்கும் நிலையில் இந்த திருமணம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பசுமை திருமணமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலர் ஜாக்கி பக்தானி என்பவரை வரும் 21ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்ய உள்ளார்.

இந்த திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் ஏற்கனவே ஆரம்பித்து விட்ட நிலையில் தற்போது இந்த திருமணம் பசுமை திருமணமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திருமண ஏற்பாடுகளை ரகுல் ப்ரீத்தி சிங் நேரடியாக கவனித்து வருவதாகவும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் குறிப்பாக திருமண நிகழ்வில் பட்டாசு வெடிக்க கூடாது என்றும் திருமண அழைப்பிதழை பேப்பரில் அச்சடிக்காமல் டிஜிட்டல் முறையில் மட்டுமே அழைப்பிதழ் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இன்னும் மூன்று நாட்களில் ரகுல் ப்ரீத் சிங் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment