புதிய அணி தேர்வு குறித்து இந்திய கேப்டன் கூறிய திடுக்கிடும் காரணம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் விக்கெட்டையும் இழந்து இருக்கிறது. மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற சில வீரர்கள் இந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இடம்பெற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக முதல் டெஸ்ட்டில் நன்றாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் தற்போது 2 ஆவது டெஸ்ட் தொடரில் இடம்பெற வில்லை. அதேபோல முதல் டெஸ்ட்டில் நன்றாக விளையாடிய பும்ராவும் அணியில் இடம்பெற வில்லை. இதற்கான காரணம் குறித்துத் தற்போது இந்தியக் கேப்டன் விராட் கோலி கருத்துத் தெரிவித்து உள்ளார். அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது ஷாக்கிங்காக இருக்கிறது. தற்போது புதிய அணியை தேர்வு செய்து இருக்கிறோம். சில வீரர்கள் நன்றாக விளையாடி இருந்தாலும் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு புதிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள் எனக் கூறியுள்ளார்.
மேலும், கடந்த போட்டியில் நாங்கள் தேர்வு செய்த அணிக்கும் இப்போது தேர்வு செய்த அணிக்கும் நிறைய காரணம் இருக்கிறது. கடந்த போட்டியில் அக்சர் காயம் அடைந்ததால் வேறு வழி எங்களுக்கு இல்லை. பும்ராவிற்கு ஓய்வு கொடுத்து இருக்கிறோம். வாஷிங்டன் சுந்தர் கடந்த போட்டியில் நன்றாக ஆடினார். ஆனாலும் அவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது எனத் தெரிவித்து இருக்கிறார்.
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பாக, விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, ரஹானே, ரிஷப் பந்த், சிராஜ், இஷாந்த் சர்மா, அஸ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாட உள்ளனர். முன்னதாக இடம்பெற்ற பும்ராவிக்கு பதிலாக சிராஜ்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல சுந்தருக்கு பதிலாக –அக்சர் பட்டேலும் நதீம்க்கு பதிலாக குல்தீப் யாதவ்வும் அணியில் இடம்பெற்று உள்ளனர்.
அதேபோல இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் காயம் காரணமாக 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். மேலும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸின்போது 5 விக்கெட்டுகளை வீழ்த்திய டாம் பெஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டு இவருக்கு பதிலாக பிராட், மொயின் அலி, பென் போக்ஸ் (கீப்பர்) கிறிஸ் வோக்ஸ், ஆலி ஸ்டோன் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த பலமான அணியுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது விளையாடி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments