சீனாவின் திட்டத்தை சுக்கு நூற்றாக்கிய இந்தியா!!! பேசிக்கொண்டே காரியத்தை முடித்த சாதுர்யம்!!!

  • IndiaGlitz, [Saturday,June 20 2020]

 

நேற்று நள்ளிரவில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “ஒட்டுமொத்த கல்வான் பகுதியும் எனக்குத்தான் சொந்தம். இந்திய வீரர்கள் ஆற்றைத் தாண்டி வருகிறார்கள். இந்தியா ஆத்திரத்தை மூட்டும் காரியங்களை கைவிட வேண்டும்“ இப்படி பல குற்றச்சாட்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதல் குறித்து இதுவரை எந்த இறுதியான முடிவும் எட்டப்படாத நிலையில் கல்வான் பகுதியில் இந்திய இராணுவம் குறுகிய பாலத்தைக் கட்டியிருப்பதாக ஏசியன்நெட் நியூஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

முதலில் ஆற்றைத் தாண்டி இந்திய வீரர்கள் நுழைகிறார்கள் என்ற குற்றம் சாட்டிய சீனா கடந்த மே 22 ஆம் தேதி கல்வான் பகுதியில் இராணுவத்தை குவித்தது. அதற்குப் பிறகுதான் கடந்த ஜுன் 6 ஆம் தேதி போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இருநாட்டு இராவணு வீரர்களும் திருப்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன. இப்படி கடுமையான பேச்சு வார்த்தைகளும் அச்சுறுத்தல்களும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் சமயத்தில் இந்திய இராணுவம் கல்வான் ஆற்றின் குறுகே பாலத்தைக் கட்டி சாதனை படைத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அதை விளக்கும் செயற்கைக்கோள் படங்களும் தற்போது வெளியாகி இருக்கின்றன.

சீனா கடந்த மே மாதத்தில் இருந்தே இந்தியாவை பார்த்து எல்லைத் தாண்டி வராதீர்கள், கட்டமைப்பு பணிகளை நிறுத்துங்கள் எனத் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறது. சீனாவையே அதிர வைக்கும் கட்டமைப்பு பணிகளை இந்திய இராணுவம் மேற்கொண்டு வருகிறதா? என முதலில் இந்திய மக்களுக்கே ஆச்சர்யம் ஏற்பட்டது. அதற்கு பின்புதான் ஒவ்வொரு செய்தியாக வெளிவரவும் செய்தது. அதன்படி ஷ்யோக் நதிக்கரையில் இருந்து தௌலத் பெக் ஒல்டி விமான ஓடுதளத்தை இணைக்கும் விதமாகவும் காரகோரம் மலைப் பள்ளத்தாக்கில் உள்ள இராணுவ முகாம்களை இணைக்கும் விதமாகவும் கிட்டத்தட்ட 255 கி.மீ சாலையை இந்திய இராணுவம் அமைத்து இருக்கிறது. இந்தச் செய்தி இந்தியா-சீனா எல்லைத் தாக்குதல் நடைபெற்ற பின்பே வெளியானது.

மேலும், லடாக் பள்ளத்தாக்கில் உள்ள பாங்காங் ஏரியில் கிட்டத்தட்ட 36 பாலங்களையும் இந்திய இராணுவம் அமைத்து இருந்த தகவலும் வெளியானது. இதையடுத்து தற்போது இன்னொரு தகவலும் தற்போது இந்திய இராணுவத்தை மெச்சும் படி வெளியாகி இருக்கிறது. பல ஆண்டுகளாக சீனா சொந்தம் கொண்டாடி வரும் கல்வான் பகுதியில் செம தில்லாக இந்திய இராணுவம் குறுகலான பாலம் ஒன்றையும் அமைத்து இருக்கிறது. இதன் கட்டுமானம் 2 நாட்களுக்கு முன்பு முடிவுற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா எல்லை பாதுகாப்பில் கவனம் இல்லாமல் இருக்கிறது என்ற விமர்சனம் கூட கடந்த சில நாட்களாக பலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியா மேற்கொண்டு இருக்கும் கட்டமைப்பு பணிகள், பாலம் அமைப்பு பணிகளை பார்க்கும்போது இந்தியா பாதுகாப்பு பணியில் தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது. சீனாவின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வந்த நிலையிலும் கல்வான் பகுதியில் குறுகலான பாலத்தை இந்திய இராணுவத்தினர் அமைத்து இருக்கின்றனர். இதற்கு முன்பு கல்வான் பகுதியில் குறுகலான நடைபாதை இருந்ததாகவும் தற்போது ஷ்யோக் – கல்வான் பகுதிகளை இணைக்கும் இடத்தில் இருந்து அற்றின் குறுக்கே 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாலம் அமைக்கப் பட்டு இருக்கிறது. இதனால் மிக எளிதாக இந்திய இராணுவம் கல்வான் பகுதியைத் தாண்டி சென்றுவிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிதாக அமைத்துள்ள 255 கிலோ மிட்டர் சாலையையும் எளிதாக பராமரிக்கவும், தௌலத் பேக் ஒல்டி விமான தளத்தை அடையவும் அதேபோல காலகோரம் மலை பள்ளத்தாக்கில் இருக்கும் இராணுவ முகாமையும் எளிதாகப் பயன்படுத்தவும் இந்த பாலம் மிகவும் உதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது‘. இந்தியா- சீனா இருநாடுகளும் எல்லைப் பகுதிகளைக் குறித்த தெளிவான வரையறை எதுவும் ம் இதுவரை வகுத்துக் கொள்ள வில்லை. இயற்கை அமைப்புகள் ஏற்படுத்திக் கொடுத்த எல்லைகளை இருநாடுகளும் பராமரித்து கொண்டு வருகின்றனர். சீனா இந்தியாவின் எல்லையை கல்வான் ஆற்றிற்கு எல்லையிலே நிறுத்தி விடலாம் என நினைத்து கொண்டு இருந்தது. ஆனால் அந்தத் திட்டம் தற்போது தவிடு பொடியாகி இருப்பதாக் கூறப்படுகிறது. காரணம் கல்வான் ஆற்றின் குறுக்கே பாலத்தை அமைத்து இந்தியாவின் எல்லைப் பகுதியை தற்போது விரிவுபடுத்தி இருக்கிறது. இதனால் சீனா கடும் காட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

லாக்டவுன் நேரத்தில் புதிய வீட்டில் குடிபுகுந்த செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி. விஜய் டிவியில் கிடைத்த புகழுக்கு பின் இருவரும் சேர்ந்து உலகம் முழுவதும்

மனைவியின் பிறந்த நாளை 14 குடும்பங்களை கொண்டாட வைத்த சென்னை நபர்

மனைவியின் பிறந்தநாளை தன்னுடைய வணிக வளாக கட்டிடத்தில் வாடகைக்கு இருக்கும் 14 குடும்பங்களையும் கொண்டாட வைத்த கணவரால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஒரே நாளில் 50 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!!! படுமோசத்தில் இருக்கும் பிரேசில்!!!

உலகமே கொரோனா கணக்குகளை பார்த்து மிரண்டு வரும் சமயத்தில் நேற்று ஒரே நாளில் பிரேசிலில் புதிதாக 54 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று

அவரு ஒரு துரோகி... குற்றம் சாட்டும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியா!!!

அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் ஜான் போல்டன். அவர் அதிபர் ட்ரம்பை பற்றி விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் பல கருத்துகளை கூறி பரபரப்பை கிளப்பி விட்டு இருக்கிறார்.

இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது... நள்ளிரவில் அறிவிப்பு வெளியிட்ட சீனாவின் புது தந்திரம்!!!

மே மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பித்த எல்லைப் பிரச்சனை இன்னும் முடிவுக்குவராத நிலையில் 20 இந்திய இராணுவ வீரர்களையும் நாம் இழந்து இருக்கிறோம்.