இந்திய அணி எங்களை அரையிறுதிக்கு வரவிடாது: பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அணி இனிவரும் போட்டிகளில் வேண்டுமென்றே தோல்வி அடைந்து எங்களை அரையிறுதிக்கு வரவிடாமல் செய்யும் வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒரு அணியை அரையிறுதிக்கு வரவிடாமல் தடுக்க, வேண்டுமென்றே தோல்வி அடைந்த வரலாறு ஏற்கனவே கிரிக்கெட் வரலாற்றில் உள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் அடுத்து நடைபெறும் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமின்றி வங்கதேசம், இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தோல்வி அடைய வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
இந்த நிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பாசித் அலி, 'எங்களை நிச்சயம் இந்திய அணி அரையிறுதிக்குள் வரவிடமாட்டார்கள். இந்திய அணிக்கு வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை அணியுடன் போட்டி இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணியுடன் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதன் பின்னர் இலங்கை, வங்கதேசம் அணிகளுடன் வேண்டுமென்றே இந்திய அணி தோல்வி அடைந்து, பாகிஸ்தான் அணியை அரையிறுதிக்குள் வரவிடாமல் செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்திய அணி வேண்டுமென்றே அவ்வாறு விளையாடி தோல்வி அடைந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்' என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாத ஒரே அணியாக இந்திய அணி கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த பெருமையை தக்க வைத்து கொள்ள அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்திய அணி விளையாடும் என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout