இந்தியா: ஊரடங்கில் 37 ஆவது நாளில் இருக்கிறோம்!!! நிலமை என்ன???

  • IndiaGlitz, [Thursday,April 30 2020]

 

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக இந்தியச் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளைவிட மெதுவான பாதிப்பு எண்ணிக்கை மற்றும் குறைவான இறப்பு விகிதம் இருப்பதால் இந்தியா கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னேறி வருவதாகவும் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 25.1% மக்கள் குணமடைந்து வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு 13.6% ஆக இருந்த குணமாகிறவர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 11 நாட்களாக அதிகரித்து காணப்படுவதாகவும் இந்தியச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்து இருக்கிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 718 புதிய பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன என்று சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அதிகாரி லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மே 3 ஆம் தேதியுடன் நீட்டிக்கப்பட்ட கொரோனா 2.0 ஊரடங்கு முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்தியா ஊரடங்கு குறித்த முடிவில் மிகவும் புத்திச்சாலித்தனமாகச் செயல்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். ஊரடங்கினால் வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள் அவர்களின் வேலைவாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் அளவிற்கு குறிப்பிட்ட வழியில் விலக்கு அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். தற்போது இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த வீடுகளுக்கு செல்லும் தேவைக்காக இரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. இதற்காக கடுமையான சுகாதார நடவடிக்கைகளுடன் தொழிலாளர்கள் மட்டும் மற்ற இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

More News

கொரோனா பூமிக்குக் கொடுத்த வரம்!!! Co2 வின் அளவு 8% குறைந்திருக்கிறது!!!

கொரோனாவின் தாக்கத்தினால் மனிதர்கள் அனைவரும் அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இயற்கையும், விலங்குகளும் இயல்பான நிலைமைக்குத் திரும்பியிருக்கின்றன.

சென்னையில் மட்டும் 138 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!

தமிழகத்தில் தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் தமிழகத்தில் இன்று மட்டும் 161 பேர்களுக்கு கொரோனா

2 டிரக் முழுவதும் அழுகிய உடல்கள்: நியூயார்க்கின் மோசமான நிலை

உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் மிக அதிகமாக உள்ளனர் என்றும் அந்நாட்டில் தான் கொரோனா வைரசால் மிக அதிக உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது

நக்மா வெளியிட்ட ரிஷிகபூரின் வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்த நெட்டிசன்கள்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மூச்சுத்திணறல் காரணமாக நேற்றிரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்

அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படியிருக்கிறது??? நிலவரம் குறித்த ஒரு தொகுப்பு!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.