இந்தியா: ஊரடங்கில் 37 ஆவது நாளில் இருக்கிறோம்!!! நிலமை என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக இந்தியச் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளைவிட மெதுவான பாதிப்பு எண்ணிக்கை மற்றும் குறைவான இறப்பு விகிதம் இருப்பதால் இந்தியா கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னேறி வருவதாகவும் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 25.1% மக்கள் குணமடைந்து வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு 13.6% ஆக இருந்த குணமாகிறவர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 11 நாட்களாக அதிகரித்து காணப்படுவதாகவும் இந்தியச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்து இருக்கிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 718 புதிய பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன என்று சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அதிகாரி லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மே 3 ஆம் தேதியுடன் நீட்டிக்கப்பட்ட கொரோனா 2.0 ஊரடங்கு முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்தியா ஊரடங்கு குறித்த முடிவில் மிகவும் புத்திச்சாலித்தனமாகச் செயல்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். ஊரடங்கினால் வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள் அவர்களின் வேலைவாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் அளவிற்கு குறிப்பிட்ட வழியில் விலக்கு அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். தற்போது இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த வீடுகளுக்கு செல்லும் தேவைக்காக இரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. இதற்காக கடுமையான சுகாதார நடவடிக்கைகளுடன் தொழிலாளர்கள் மட்டும் மற்ற இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com