மோசமான பிட்ச் இதுதான்… இந்திய பிட்சை குறித்து இங்கிலாந்து வீரரின் பகீர் குற்றச்சாட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சேப்பாக்கதில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றது என்ற தகவல் பெரும்பாலானோருக்குத் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்சர் “நான் பார்த்ததிலேயே இதுதான் படு மோசமான மைதானம்“ என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் என்னை ஈர்க்கக் கூடிய எந்த விஷயமும் இந்த மைதானத்தில் இருக்கவில்லை என்றும் கூறி இருக்கிறார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. இருப்பினும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்சர் நான் பார்த்ததிலேயே மோசமான சர்ஃபேஸ் அதுவாகத்தான் இருக்கும் என்றும் பந்து வீச்சாளர்களை குறி வைக்கும் வகையில் எந்த விஷயங்களும் அங்கு இல்லை என்றும் டெய்லி மெயிலுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர் நாளை தொடங்கும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து அணியில் பங்கேற்பார் என்றும் அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஜோப்ரா ஆர்ச்சர் பற்கேற்பார் என்றும் தகவல்கள் கூறப்படுகின்றன. அதேபோல நாளை நடக்க இருக்கும் போட்டியில் இந்திய அணியிலும் ஷாபாஸ் நதீம்முக்கு பதிலாக குல்தீப் யாதவ் பங்கேற்பார் என்றும் தகவல்கள் கூறப்படுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments